“சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்!”.. அமெரிக்காவில் நீச்சல் குளம் அருகே நடந்த பயங்கர சம்பவம்.. நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள கேரி நகரில் வசித்துவந்த அமெரிக்கத் தமிழர் 55 வயதான செல்வராஜு வெள்ளியங்கிரி, வீட்டிற்கு அருகே உள்ள நீச்சல் குளத்தின் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
செல்வராஜு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் வாழும் தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் இந்த சம்பவத்தில் செல்வராஜு வெள்ளியங்கிரியை துப்பாக்கியால் சுட்டவர் யார் என்கிற விவரம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து பேசிய நகர காவல்துறை அதிகாரி கேத்தரின் கிறிஸ்டியன் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாகக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி பேசிய கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும், ‘விசாரணை’ திரைப்பட நாவலாசிரியருமான மு. சந்திரகுமார், “என் நண்பர் தங்கம் மூலமாக அறிமுகமாகிய செல்வராசு சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவை ஹோப்ஸ் ஆட்டோ ஸ்டேண்டுக்கு வந்து என்னைச் சந்தித்தார். என்றும் நினைவுகளில் நீடிப்பவர். அவருக்கு நேர்ந்த இந்த சம்பவத்திற்கான காரணங்களைத் தேடும் அதே சமயம் அமெரிக்கக் காவல் துறை குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க ஏதேனும் சில வழிகளில் நாம் முயற்சிக்க வேண்டும். அதில் ஒன்று தமிழக அரசை தூதரகத் தொடர்புகொண்டு சிறப்புக் கவனம் எடுக்கச்செய்வது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நம்மிடையே பேசிய கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மகேசுகுமார், “கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராசு வெள்ளியங்கிரி. 1989-90 காலகட்டத்தில் எனக்கு நண்பரானவர். அமெரிக்காவில் வடக்குக் கரோலினா மாகாணத்தில் கேரி என்ற பகுதியில் தன் மனைவி கலைச் செல்வி மற்றும் 13 வயது மகள் ஆனந்தியுடன் வசித்து வந்தார். அந்நகரில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் செல்வராசுவும் அவர் மனைவியும் தமிழ்ப் பணியையும் செவ்வனே செய்து வந்தனர். அங்கு வாழும் தமிழ்க் குழந்தைகள் படிப்பதற்காக நிறைய தமிழ் நூல்களை ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் வாங்கிச் செல்வார். அவரது இழப்பு அக்குடும்பத்திற்கும், அவர் நண்பர்களுக்கும் பேரிழப்புதான்” என்று வருந்தினார்.
மேலும் பேசிய மகேசுகுமார், “வடக்குக் கரோலினா மாகாணத்திலுள்ள தமிழ்ச் சங்க நண்பர்கள் செல்வராசு படுகொலை செய்யப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக அவரது வீட்டிற்குச் சென்று அவர் மனைவி கலைச் செல்விக்கும்,மகள் ஆனந்திக்கும் ஆறுதல் கூறி, உடன் இருந்து சட்ட முறைகளைக் கவனித்து வருகிறார்கள். வடக்கு கரோலினா மாகாண தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் அன்பிற்கும்,உறுதுணைக்கும நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ஹனிமூனில் கால் டாக்ஸி டிரைவரை விட்டு மனைவியைக் கொன்ற கணவர்!”.. ‘சிறையில் இருக்கும் டிரைவர்’.. பரோல் விஷயத்தில் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்!
- 'அவசர அவசரமாக நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா'... 'குடும்பத்தினர் மீதான தாக்குதலில் நேர்ந்த சோகம்'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!'...
- ‘திருட்டு’ போனுக்காக தொடங்கிய ‘தொடர்’ கொலைகள்.. சரியாக 1 வருடம் காத்திருந்து.. ‘அண்ணன்’ செய்த ‘குலைநடுங்கும்’ சம்பவம்!
- “உச்ச பட்ச ‘கோபத்தில்’ சித்தப்பா வீட்டுக்கு போனவர்கள்!’ ... சிறிது நேரத்திலேயே போலீசில் சரண்!” - கொலையாளிகள் ‘கையில்’ இருந்ததை பார்த்து ‘உறைந்து’ நின்ற போலீசார்!!
- 'பக்கத்துவீட்டு அண்ணா'னு அடிக்கடி அங்க போவான்... 'காணாமல்போன சிறுவன்'... 'கட்டிலுக்கு அடியில் கிடந்த பயங்கரம்'... 'பதறவைக்கும் சம்பவம்!'...
- 'எனக்கும் எனக்கும் கல்யாணம்...' 'இது என்னடா புதுசா இருக்கு...' 'மோதிரம் போட்டதெல்லாம் வேற லெவல்...' - அடுத்தது நடந்தது தான் செம ட்விஸ்ட்...!
- 'உலகையே' புரட்டிப்போட்ட 'டிக்டாக்' செயலியின் 'CEO' எடுத்த 'அதிர்ச்சி' முடிவு!
- 'பண்றதெல்லாம் பண்ணிட்டு'... 'மகனுக்கு ஃபோன் போட்ட தந்தை'... 'பேரதிர்ச்சிக்கு உள்ளான மகன்!'...
- 'தம்பி விட்டுரு டா டேய்'... 'கதறிய 51 பேர்'... 'கொடூரத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செஞ்ச இளைஞர்'... உலகையே அதிரவைத்த சம்பவத்தில் வந்த தீர்ப்பு!
- 'அபார்ட்மென்ட்டுல விளையாடிட்டு இருந்தாங்க'... 'வெளியே கிடந்த சிறுவனைப் பார்த்து'... 'கதறித் துடித்த குடும்பம்'... 'பதறவைத்த சிசிடிவி வீடியோ!'...