“முதல் பந்தே சிக்ஸரா?”.. அமெரிக்காவின் புதிய அதிபர் ‘ஜோ பைடனின்’.. இந்தியர்கள், முஸ்லிம்கள், H1B விசா தொடர்பான முக்கிய முடிவு?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றறுள்ளனர்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் 1.10 கோடி புலம் பெயர்ந்த மக்களுக்கு, முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் நிலையில் குடியுரிமை வழங்கத் திட்டமிட்டுள்ளார். இதில் இந்தியர்கள் 5 லட்சம் பேருக்குக் குடியுரிமை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது, குடியேற்றத் திட்டங்களில் சீர்திருத்தம், குடியுரிமை வழங்குதல் ஆகிய வாக்குறுதிகளில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பெயர்ந்து தங்கி, வேலை செய்யும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டு, குடும்பத்தாருடன் அவர்கள் இணைய வழி செய்யப்படும் என்றும், இதற்காக டிஏசிஏ சட்டம் எனபடும் குழந்தைப் பருவ வருகைக்கான ஒத்திவைப்பு நடவடிக்கையும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
இவை தவிர, வேலை விசாக்கள், ஹெச்1பி விசா உள்ளிட்டவற்றை அதிகரித்து, க்ரீன் கார்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கி வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுவதற்கு வழிவகை செய்து தரப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே ஈரான், சிரியா உள்ளிட்ட சில முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் வருவதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த தடையையும் நீக்குவதாக குறிப்பிட்டுருந்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “நான் முதல் பெண் அல்ல.!”.. வெற்றி உறுதியானதும் கமலா ஹாரிஸின் முதல் போன் கால்!.. பரவி வரும் வீடியோ!
- ஜோ பைடன் ‘அமோக’ வெற்றி.. 30 வருஷத்துல எந்த அதிபருக்கும் நடக்காத ‘ஒரு’ சோதனை.. சோகத்தில் டிரம்ப்..!
- அத ‘கம்பேர்’ பண்ணா இதெல்லாம் ஒன்னுமேயில்ல.. 20 வருஷத்துக்கு முன் அமெரிக்க தேர்தலில் ‘ஆட்டம்’ காட்டிய ஜார்ஜ் புஷ்..!
- லைவ் ஒளிபரப்பை ‘பாதியிலேயே’ நிறுத்திய டிவி சேனல்கள்.. அப்டி டிரம்ப் என்ன பேசினார்?.. பரபரப்பில் அமெரிக்கா..!
- யாரு ‘சாமி’ நீங்க.. அமெரிக்க தேர்தல் முடிவை ‘2 வாரத்துக்கு’ முன்னாடியே கணித்த நபர்.. தீயாய் பரவும் வீடியோ..!
- இன்னும் ‘ரிசல்ட்டே’ வரல.. அதுக்குள்ள அதிபரா?.. வாழ்த்துச் சொல்லி வசமாக ‘சிக்கிய’ டிரம்ப் மனைவியோட நாட்டு பிரதமர்..!
- 'வாழ்க்கை ஒரு வட்டம்'... 'அதிபர் தேர்தலில் இது மட்டும் நடந்துச்சு'... டிரம்ப்க்கு காத்திருக்கும் சோதனை!
- அங்க ‘ஜெயிச்சா’ வெற்றி கன்பார்ம்னு சொல்லுவாங்க.. ஆனா இந்த தடவை எல்லாமே தலைகீழா நடக்குது..!
- 'அவங்க ஜெயிச்சு வந்து... 'இத' செய்வாங்கனு நம்புறோம்!'.. மன்னார்குடி கிராம மக்களின் ஆசையை நிறைவேற்றுவாரா கமலா ஹாரிஸ்?.. வியூப்பூட்டும் சம்பவம்!
- நைட் வரை நல்லாதான் இருந்தது.. ஆனா திடீரென ‘மாறிய’ முடிவுகள்.. ‘உச்சக்கட்ட’ பரபரப்பில் அமெரிக்கா..!