'என்ன பண்ண சொல்றீங்க?.. 'இத' விட்டா வேற வழி இல்ல'!.. 'பூஸ்டர் டோஸ் தடுப்பூசி'யில் வேகமெடுக்கும் உலக நாடுகள்!.. அதிர்ச்சி பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் டெல்டா கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள புதிய வியூகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்டா வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு இடையே வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசிகளுக்கு சவால் விடும் வகையில் அதன் ஆற்றல் இருப்பதால், அதை கட்டுப்படுத்துவதில் அரசுகள் திணறி வருகின்றன. 

இதற்கிடையே, அமெரிக்காவில் உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

இந்நிலையில் தான், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு Pfizer-BioNTech மற்றும் Moderna நிறுவனங்களுக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. மேலும், சுவீடன், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்