"'கிறிஸ்துமஸ்' கொண்டாட பொருள் 'ஆர்டர்' பண்ணா... என்னங்க உள்ள 'அனுப்பி' வெச்சுருக்கீங்க??..." பார்சலை திறந்ததும் ஷாக்கான 'பெண்'... 'அதிர்ச்சி' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் இல்லினோயிஸ் (Illinois) என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா எல்லிஸ். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது பாட்டியின் வீட்டிலுள்ள தோட்டத்தை அலங்கரிக்க வண்ணக் கொடிகளை அவர் ஆர்டர் செய்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் கொடியை ஆர்டர் செய்திருந்த நிலையில், அது தற்போது வீட்டிற்கு வந்தடைந்துள்ளது. வீட்டிற்கு வந்த பார்சலை ஆண்ட்ரியா திறந்து பார்த்த போது உள்ளே இருந்த பொருள் ஒன்றைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். காரணம், வண்ண கொடிகளுடன் வேறொரு பையும் அதில் இருந்துள்ளது. உயிருக்கு ஆபத்து (biohazard) என குறிப்பிட்டிருந்த அந்த மற்றொரு பைக்குள் ஒருவரின் கொரோனா சோதனைக்கான மாதிரி இருந்துள்ளது.
அச்சத்தில் உறைந்து போன ஆண்ட்ரியா, உடனடியாக காவல் நிலையத்திற்கும், சுகாதார துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த பையைப் பெற்றுக் கொண்ட உயர் அதிகாரி, ஒருவரின் கொரோனா பரிசோதனை மாதிரி எப்படி வீட்டிற்கு ஆர்டர் செய்துள்ள பார்சலில் வந்துள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டுமில்லாமல், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் பொருட்கள் ஆர்டர் செய்திருந்த பையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவிருந்த மாதிரிகள் இருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘விளம்பர சந்தையில் தனி ஆதிக்கம்'... ‘கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க மாகாணங்கள் வழக்கு’...!!!
- ‘கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி’... ‘தடுப்பூசி போடும் பணியை துவங்கிய நாடு’... ‘இவங்களுக்கு தான் பர்ஸ்ட்’... ‘வாழ்த்து சொல்லி அதிபர் ட்வீட்...!!!
- வேற வழி இல்ல...! நம்ம ஊரு 'அந்த டிஷ்' அறிமுகம் பண்ணிட வேண்டியது தான்...! 'அமெரிக்க கொரோனா நோயாளிகளுக்காக...' - தமிழக சமையல் கலைஞரின் அசத்தல் காரியம்...!
- "அவரு ஜெயிச்சத எல்லாம் ஏத்துக்க முடியாதுபா... மொதல்ல 'அந்த' விஷயம் நடக்கட்டும்..." - 'ரஷ்ய' அதிபர் சொன்ன பரபரப்பு 'காரணம்'!!!
- ‘ஓகே சொன்னதும்’... ‘அடுத்த சில மணிநேரங்களில்’... ‘தடுப்பூசி விநியோகிக்கப்படும்’...‘ரெடியான தடுப்பு மருந்து நிறுவனம்’...!!!
- 'இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த’... ‘இந்த தடுப்பூசிகள் நல்ல பலன் கொடுக்கும்’... ‘விஞ்ஞானிகள் சொல்லும் காரணம்’...!!!
- "அவரு 'இறந்து' போய்ட்டாரு..." 'மருத்துவர்' சொன்ன அடுத்த '45' நிமிடத்தில் காத்திருந்த மிகப் பெரிய 'ட்விஸ்ட்'!!!
- ‘அதெப்டி நான் சொல்லியும் கேட்கல’... ‘கடுப்பில் அதிரடியாக ட்ரம்ப் எடுத்த முடிவு’... ‘தேர்தல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்’...!!!
- ‘90 சதவீதம் பயனளிக்கும்’... ‘கொரோனா தடுப்பு மருந்தை’... ‘முதல் கட்டமாக இந்த 4 இடங்களுக்கு’... ‘வழங்க பைசர் நிறுவனம் முடிவு’...!!!
- 'என்னப்பா நடக்குது இங்க’... ‘எல்லாமே முன்னுக்குப் பின் முரணா இருக்கு’... ‘கொரோனா பரிசோதனை குறித்து’... ‘கேள்வி எழுப்பிய பில்லியனர்’...!!!