ஆன்லைனில் இலவசமாக சோஃபா வாங்குன பெண்.. மெத்தைக்கு கீழ இருந்த கவர்.. ஒரே நைட்ல அடிச்ச அதிர்ஷ்டம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஆன்லைன் மூலமாக சோஃபா வாங்கிய பெண்ணுக்கு ஜாக்பாட் அடித்த சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
இலவச சோஃபா
அமெரிக்காவை சேர்ந்தவர் விக்கி உமோது. இவர் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணத்திற்கு அருகே, உள்ள கால்டன் என்னும் பகுதியில் அமைந்துள்ள புதுவீட்டில் கடந்த வாரம் குடியேறியுள்ளார். விக்கி வாங்கியுள்ள வீட்டில் பர்னிச்சர்கள் இல்லாத காரணத்தினால் குறைந்த விலையில் சோஃபா மற்றும் சேர்கள் வாங்க ஆசைப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் ஒன்றின் மூலமாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க திட்டமிட்டிருக்கிறார் விக்கி. இதனை அடுத்து அந்த இணையதளத்தில் 2 சோஃபா மற்றும் அதற்கு மேட்சான சேர் இலவசமாக தரப்படும் என அறிவித்திருந்ததை கண்டு ஆச்சரியமடைந்த விக்கி அதனை ஆர்டர் செய்திருக்கிறார்.
இலவசம்
இலவசமாக எப்படி 3 பொருட்களை ஒருவர் விற்கக்கூடும் என்ற சந்தேகம் விக்கிக்கு எழுந்திருக்கிறது. இதனையடுத்து, அந்த விற்பனையாளரை போன்மூலமாக தொடர்புகொண்டு பேசியுள்ளார் விக்கி. அப்போது,"அந்த பொருட்கள் அனைத்தும் எங்களது வீட்டில் இறந்துபோன நபர் ஒருவருடையது. ஆகவே, அவற்றை விற்பனை செய்ய விரும்பாமல் இலவசமாக வழங்க முடிவெடுத்தோம்" என்று விற்பனையாளர் தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி பேசிய விக்கி,"எங்களது புது வீட்டில் எந்த பர்னிச்சர்களும் இல்லை. ஆகவே இந்த சோஃபாவை வாங்க முடிவெடுத்தேன்" என்றார்.
அதிர்ஷ்டம்
இந்நிலையில் 2 சோஃபா மற்றும் சேர் ஆகியவை விக்கியின் புதுவீட்டில் டெலிவரி செய்யப்பட்டிருக்கின்றன. அப்போது சோஃபாவின் மெத்தை வித்தியாசமான முறையில் மேலெழுந்து நிற்பதை கண்ட, விக்கி அதை ஆய்வு செய்திருக்கிறார். அப்போது மெத்தையில் இருந்த ஜிப்பை திறக்க உள்ளே கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து மலைத்துப்போயிருக்கிறார் அவர்.
இதுபற்றி அவர் பேசுகையில்," பணத்தை பார்த்ததும் நான் எனது மகனை சீக்கிரம் வா என அழைத்தேன். உடனடியாக சோஃபாவை அளித்த நபருக்கு போன் செய்து விபரத்தை கூறினேன். கடவுள் எனக்கு நல்ல வாழ்க்கையை வழங்கியுள்ளார். எனக்கு அழகான 3 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். அதற்கு மேலே நான் ஏன் ஆசைப்பட வேண்டும்?" என்றார்.
பணம் வேண்டாம்
இதனை அடுத்து சோஃபாவை வழங்கிய நபரிடம் அதிலிருந்த பணத்தை திருப்பி கொடுத்துள்ளார் விக்கி. சோஃபாவுக்கு சொந்தக்காரர் தனது வீட்டிலும் இப்படி ஆங்காங்கே பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இறந்துபோன தனது உறவினர் இதை செய்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். விக்கி அளித்த பணத்தை பெற்றுக்கொண்ட நபர், அதிலிருந்து 2,200 டாலரை விக்கியிடமே அளித்து, புது குளிர்சாதன பெட்டி வாங்கிக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
ஆன்லைனில் இலவசமாக வாங்கிய சோஃபாவில் 36,000 டாலர் பணம் இருந்ததை மீண்டும் உரிமையாளருக்கே பெண்மணி வழங்கிய சம்பவம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
ஊழல கண்டுபிடிச்சதுக்காக.. 7 முறை சுடப்பட்ட அரசு ஊழியர்.. சோதனை'ய தாண்டி வேற லெவல் சம்பவம் செய்த நபர்
தொடர்புடைய செய்திகள்
- கர்ப்பமா இருக்குறப்போவே திரும்பவும் கர்ப்பம்.. அமெரிக்க பெண்ணுக்கு நடந்த அதிசயம்.. பின்னணி என்ன??
- 19 வயசுல காலேஜ் படிப்பை விட்டு வெளியேறிய மாணவர்.. இன்னைக்கு அவர் லெவலே வேற.. சொத்து மதிப்பை கேட்டா தலையே சுத்திடும்..!
- விற்பனைக்கு வந்த நிஜ Conjuring வீடு.. 286 வருஷமா தொடரும் மர்மம்.. கிட்ட நெருங்கவே பயப்படும் மக்கள்..!
- 2 நாட்டையும் இணைக்கும் பிரம்மாண்ட Tunnel.. போதை ஆசாமிகளை பிடிக்கப்போன அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்..உள்ளே இருந்த பலே டெக்னாலஜி..!
- அது ஏன் கூகுள் மேப்ல இப்படி தெரியுது.? மர்ம வீடா..? நெட்டிசன்களை அலறவைத்த வரலாறு..!
- 100 காலேஜ் மாணவர்களின் கடன்களை சிங்கிளாக அடைத்த மர்ம நபர்.. இவ்வளவு கோடியை அனுப்பிட்டு பெயரை கூட சொல்லாம போய்ட்டாரே.. வைரல் வீடியோ..!
- "37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கிய விமானம் " உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பிய மர்மத்தின் பின்னணி என்ன?
- எல்லாரும் நினைக்கிறமாதிரி ரஷ்யா கருங்கடல்ல போர் கப்பலை மட்டும் நிறுத்தல.. வேற ஒன்னும் செஞ்சிட்டு இருக்காங்க.. குண்டைத் தூக்கிப்போட்ட அமெரிக்கா !
- 4 மாசமா வீட்டுக்குள்ள கேட்ட குறட்டை சத்தம்.. "ஆத்தாடி.. இவ்வளவு நாளா வீட்டுக்குள்ள இதையா வச்சிருந்தீங்க".. ஷாக் ஆன மீட்புப்படை வீரர்கள்..!
- ATM ல் கொள்ளையடிக்க வந்த நபர்.. கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கியும் நோ யூஸ்.. கடைசில நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!