'Sorry, உங்க அம்மா இறந்துட்டாங்க'... '45 நிமிடம் கழித்து பீப், பீப் என கேட்ட சத்தம்'... 'ICUக்கு ஓடிய டாக்டர்கள்'... கற்பனையை மிஞ்சிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சில கற்பனையான விஷயங்களை நாம் சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என சில நேரம் நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கேத்தி பேடன். இவர் மும்முரமாக கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், உங்களது மகள் பிரசவ வலியில் துடிப்பதாகவும் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் பதறிப்போன கேத்தி உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அவர் பதற்றத்தோடும், பரபரப்பாகவும் மருத்துவமனைக்குச் சென்றதால் கேத்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் மயங்கி விழுந்துள்ளார். உடனே கேத்தியை அவசர பிரிவில் சேர்த்த மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தார்கள்.

ஆனால் அதிகப்படியான பதற்றம் மற்றும் பயம் காரணமாக, கேத்தியின் ரத்த அழுத்தம் முழுவதுமாக குறைந்ததுடன், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனும் நின்றுவிட்டது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லாத நிலையில், கேத்தி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதே நேரத்தில் பிரசவ வலியால் சேர்க்கப்பட்ட கேத்தியின் மகளுக்கு வெற்றிகரமாகப் பிரசவமும் நடந்தது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்வதற்கு முன்னால் கேத்தியின் மரணச் செய்தியை மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்கள். இதனால் மொத்த குடும்பமும் துயரத்திலிருந்த நேரத்தில், திடீரென மருத்துவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடினார்கள்.

இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட கேத்தியின் ஆக்சிஜன் லெவல் திடீரென அதிகரித்து மீண்டும் உயிர் பிழைத்தார். இந்த அதிசயத்தால் மருத்துவர்களே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள். இதற்கிடையே சிகிச்சைக்குப் பிறகு பேசிய கேத்தி, ''இந்த வாழ்க்கையை ரசித்து வாழ எனக்கு இரண்டாவது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய வாழ்க்கையில் இனிமேல் வரப்போகும் ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது'' என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்