ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...! நாம எல்லாரும் ஒண்ணா நின்னு நம்ம 'பவர்' என்னனு 'அவங்களுக்கு' காட்டணும்... ! போடப்பட்டுள்ள 'AUKUS' கூட்டுத் திட்டம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா (America), ஆஸ்திரேலியா (Australia) மற்றும் பிரிட்டன் (UK) ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து சீனாவை (China) எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள உடன்படிக்கை ஒன்றை அறிவித்துள்ளன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் இந்த திடீர் உடன்படிக்கைக்கு காரணம் இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் ஆகும்.
மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்ட இந்த ஒப்பந்தத்தில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு, மூன்று நாடுகளும் ஆக்கஸ் (AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு நாடும் தங்களின் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் பகிர்ந்துக் கொள்ளும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியாப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டத்தின் முதல் முயற்சியாக அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆக்கஸ் கூட்டுத் திட்டத்தை குறித்து கூறியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ' இப்போது இணைந்துள்ள இந்த மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள். இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக வந்திருக்கிறது. இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும், மக்களைக் காக்கவும் இன்றியமையாதது' எனத் தெரிவித்துள்ளார்.
ஆக்கஸ் கூட்டுத் திட்டத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா இதுகுறித்து கூறுகையில், 'ஆஸ்திரேலியா அணு ஆயுதமற்ற நாடாக இருக்கும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கிறது' என திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் எச்எம்எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பல் இந்தோ - பசிபிக் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்ட போது அதில் அமெரிக்க உபகரணங்களும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உங்களுக்கு 'தில்' இருக்கா...? 'இல்லன்னா திரும்பி பார்க்காம போய்கிட்டே இருங்க...' '13 மூவீஸ் பார்த்து பணத்த அள்ளிட்டு போகலாம்...' - லிஸ்ட்ல 'என்னெல்லாம்' படங்கள் இருக்கு...?
- இப்படியொரு 'ராக்கெட்' லாஞ்சரா...! 'இனி எவனாச்சும் நம்மள நெருங்கட்டும், அப்புறம் இருக்கு...' - வயித்துல புளிய கரைக்குற மாதிரி 'மாஸ்' சம்பவம் செய்த நாடு...!
- 'அங்க' வச்சு என்ன 'பேசினோம்'னு மறந்துட்டீங்க இல்ல...? 'இதெல்லாம்' நல்லாவா இருக்கு...? - தாலிபான்கள் கடும் கண்டனம்...!
- 'தாலிபான்களோட மனசு குளிர்ற மாதிரி...' சீனா வெளியிட்ட 'செம' தகவல்...! 'எங்களுக்கும் சப்போர்ட்டுக்கு ஆளு வந்தாச்சு...' - குஜாலான தாலிபான்கள்...!
- '5 வயசா இருக்கும்போது தூக்கத்துல இருந்து முழிச்சேன்'... 'இப்போ 40 வருஷம் ஆச்சு'... பெண் சொன்னதை கேட்டு மிரண்டுபோன மருத்துவர்கள்!
- என்னங்க இது அநியாயம்...? 'நம்ம ஊர்ல ரோட்டு சைடுல சும்மா கெடக்கும்...' 'அத போய் ரூ.1,800-க்கு ஆன்லைன்ல விக்குறாங்க...' - அதுக்கு புதுசா 'பெயரு' கூட வச்சிருக்காங்களாம்...!
- சீனா பெருசா 'பிளான்' பண்ணிட்டாங்க...! 'இந்தியாவுக்கு தான் சரியான ஆப்பு...' என்ன நடக்க போகுதோ...? - 'பேரிடியாய்' வெளிவந்துள்ள 'அதிர' வைக்கும் தகவல்...!
- 'என்ன சொல்றீங்க?.. 'அவரு' ஆப்கான்ல சிக்கிட்டாரா'!?.. துடித்துப்போன இளவரசர்!.. ஒரு ஆளுக்காக... தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பிரிட்டன் படை!... யார் அவர்?
- 'என்ன' செய்யணுமோ 'அத செஞ்சிட்டு' தான் கிளம்பியிருக்கோம்...! தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் வாய்ப்பே இல்ல ராஜா...! - 'நாங்க'லாம் அப்போவே அப்படி...!
- ஏன்டா... எப்போவும் 'எங்க' கிட்டயே வந்து 'சரசம்' பண்றீங்க...? 'ஒரு அளவுக்கு தான் பொறுக்க முடியும்...' - கோபத்தில் 'கொந்தளித்த' சீனா...!