'இந்தியர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி'... 'ஹெச்-1பி விசா விதிமுறையில் இவர்களுக்கு மட்டும் தளர்வு!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா மூலம் வேலை பார்த்தவர்கள் மீண்டும் திரும்பி பணியாற்றலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துள்ள கொரோனா பாதிப்பு காரணமாக உள்நாட்டினருக்கே வேலை இல்லாதபோது வெளிநாட்டினருக்கு எப்படி வேலை தருவது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஜூன் மாதம் ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாக்களை இந்தாண்டு இறுதிவரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். பின்னர் இதைத்தொடர்ந்து அரசு ஒப்பந்த பணிகளில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்தவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த விசா தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூன் 22ஆம் ஆண்டு ஹெச்-1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் ஹெச்-1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம். மேலும் அவர்கள் தாங்கள் வகித்த வேலையில் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதாக இருந்தால் மட்டுமே அமெரிக்கா திரும்பலாம். ஹெச்-1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்