184 நாடுகளில் 'நரக' வேதனை... 12 முறை 'எச்சரித்தும்' கேட்கவில்லை... வெளியாகியுள்ள 'புதிய' தகவல்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவல் குறித்து 12 முறை அதிபர் ட்ரம்புக்கு அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு 12 முறை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ எச்சரித்ததாகவும், அமெரிக்காவில் வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த எச்சரிக்கைகளை அதிபர் ட்ரம்ப் முழுமையாக நிராகரித்துவிட்டதால்தான் இப்போது கொரோனாவால் மோசமான பாதிப்புகளை அமெரிக்கா சந்தித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகளாவிய பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பு பற்றிய விரிவான கட்டுரைகள் காட்டப்பட்டபோதும் அதை ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் இருந்தார் என அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்டிடம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் கொரோனவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து 60 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இதற்கிடையே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், சீனா முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால்தான் தற்போது 184 நாடுகள் நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே மாதத்தில் 3 ஆயிரம் பேர் பலி!.. கொரோனா ஊரடங்கு காலத்தில்... அரசாங்கத்தை விரட்டும் அட்டூழியம்!.. அலறும் மெக்சிகோ!
- 'மத்த' நாடுகளை விட... நாங்க இத 'அதிகமாவே' செய்றோம்... அதனால தான் எங்களுக்கு 'பாதிப்பு' அதிகம்!
- எங்க நாட்டுக்கு 'அதெல்லாம்' தேவையில்லை... கொரோனாவை 'வித்தியாசமாக' கையாளும் 'அரசு'... ஆய்வாளர்கள் 'எச்சரிக்கை'...
- 'சென்னையில் உணவு டெலிவரி பாய்க்கு கொரோனா'... 'எந்த வீட்டிற்கு எல்லாம் டெலிவரி'... கணக்கெடுப்பு தீவிரம்!
- 'துளிர்த்த நம்பிக்கை'... 'சென்னை மக்களுக்கு பாசிட்டிவ் செய்தி'... கொரோனா தொற்றில்லா இடமாக மாறிய மண்டலம்!
- அறிவுரை வழங்கிய முதலமைச்சர்!.. அணிவகுத்து நின்ற தூய்மை பணியாளர்கள்!.. என்ன காரணம்?
- 'வல்லரசு' நாடுகளே 'திணறும்' வேளையில்... மக்களில் 'ஒருவரை' கூட இழக்காமல்... கொரோனாவைக் 'கட்டுப்படுத்திய' நாடு!... எப்படி சாத்தியமானது?...
- ‘இந்தியாவில் ஒரே நாளில்’... ‘அதிகபட்சமாக உயர்ந்த பலி எண்ணிக்கை’... ‘31 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு’!
- "தமிழகத்தன் 6 மாநகராட்சிகளில் மீண்டும் பழைய ஊரடங்கு!"... "இன்று ஒருநாள் மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் இருக்கும்!.. குவியும் மக்கள்!
- 2 நாட்களாக 'நம்பிக்கை' கொடுத்த எண்ணிக்கை... 'மீண்டும்' ஒரே நாளில் 'உயர்ந்துள்ள' உயிரிழப்பால் 'அதிர்ச்சி'..