'இவரு வேற ரகம் பாஸ்'... '50 கோடி கொரோனா தடுப்பூசி'... 'ஜோ பைடன்' எடுத்துள்ள அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்துள்ள முடிவு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

கொரோனா உலகையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமே கொரோனவை கட்டுப்படுத்தும் ஆயுதமாக உள்ளது. இதனிடையே 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட உள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதைக் குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அதிபர் பைடன் இன்று அறிவிக்க உள்ளார். இவை ஆகஸ்ட் 2021 முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

20 கோடி தடுப்பூசிகள் இந்தாண்டு இறுதிக்குள் விநியோகிக்கப்படும். மீதமுள்ள 30 கோடி தடுப்பூசிகள் 2022 முதல் பாதிக்குள் விநியோகிக்கப்படும். இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்பட பல்வேறு ஆசிய நாடுகளுக்கு 70 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப ஜோ பைடன் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்