'எங்கள நோட் பண்ணி திருடுறதே வேலையாப் போச்சு’... ‘இந்த சீனாவுக்கு’... ‘புது குண்டை தூக்கிப் போடும் அமெரிக்கா’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொடர்பான அமெரிக்காவின் ஆராய்ச்சிகளை சீனாவின் ஹேக்கர்கள், இணையதளம் மூலம் திருடுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிக்கும் போட்டியில், உலக நாடுகள் கொரோனா குறித்து என்ன விதமான ஆராய்ச்சிகளை செய்கிறது என்று மற்ற நாடுகள் ஹேக்கர்கள் மூலம் தகவல்களை திருடி தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக சீனாவும், ரஷ்யாவும். இந்நிலையில் கொரோனா தொடர்பான தங்களின் ஆராய்ச்சிகளை சீனாவின் ஹேக்கர்கள், இணையம் மூலம் திருடுவதாக அமெரிக்காவின் எப்ஃபிஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை (Department of Homeland Security) குற்றஞ்சாட்டியுள்ளது.

கொரோனா உருவாக சீனாதான் காரணம் என்று அமெரிக்கா சொல்லி வந்தநிலையில்,  ஹேக்கர்கள் உதவியுடன் சீனா, அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி குறித்த விவரங்களை திருடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது, எப்படி டெஸ்டிங் செய்யப்படுகிறது என்பது குறித்து தகவலையும் சீனா திருடுவதுடன், இதற்காக பெரிய ஹேக்கர்கள் குழுவை சீனா களமிறக்கி உள்ளது. இணைய ரீதியாக சைபர் வார் போல இதை சீனா செய்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்காக அந்நாட்டு ஹேக்கர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் போல வேடம் இட்டுக்கொண்டு, தங்கள் ஆராய்ச்சிக்கு தகவல் கேட்பது போல வந்து, பின் ஹேக்கிங் மூலம் முக்கிய தகவல்களை திருடுகிறார்கள். எளிதாக ஹேக் செய்யமுடியும், ஆராய்ச்சி மருத்துவமனைகள், தனியார் கொரோனா சோதனை மையங்கள் ஆகியவற்றை அதிகமாக குறி வைக்கிறார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

சீனா இப்படி இணையம் மூலம் குற்றங்களை செய்வது வழக்கம்தான் என்றாலும், கொரோனா சமயத்திலும் அந்த நாடு இப்படி செய்வது அதிர்ச்சி தருகிறது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை (Department of Homeland Security) தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த ஹேக்கிங் முயற்சியை தடுத்து நிறுத்தியிருக்கிறோம் என்றும் கூறியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா இடையே கூடுதலாக சைபர் யுத்தமும் சேர்ந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்