‘கர்ப்பமாக இருக்கிறேன்’ எனக் கூறியும் வாக்கிங் சென்ற பெண்ணை 5 முறை சுட்டுக் கொன்ற காவலர்
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த திங்கள் கிழமை இரவு பமேலா ஷாண்டேய் டர்னர் (44) என்ற பெண் அந்தப் பகுதி காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பமேலா இரவு வெளியே நடந்து கொண்டிருந்ததைப் பார்த்த அதிகாரி ‘இங்கு என்ன செய்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் ‘எனது வீடு அருகில் தான் உள்ளது. தினமும் இங்கு தான் நடைப்பயிற்சி செல்வேன்’ எனக் கூறியுள்ளார். அதற்குப் பிறகும் அவர் தொடர்ந்து விசாரிக்க, ‘நீங்கள் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள்’ என பமேலா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் சண்டையாக மாற காவல்துறை அதிகாரி பமேலாவைக் கைது செய்ய முயன்றுள்ளார். அதற்கு அவர் ஒத்துழைக்காமல் போக அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என பமேலா சொல்ல அதையும் கேட்காமல் மறுபடியும் அவரை நோக்கி தொடர்ந்து சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது அருகில் இருந்த ஒருவரால் வீடியோவாக எடுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், ‘பமேலா கர்ப்பமாக இல்லை. அவர்தான் முதலில் துப்பாக்கியைப் பறித்து அதிகாரி மீது குறி வைத்துள்ளார். அவர் மீது ஏற்கெனவே வாரண்ட் இருக்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஹலோ.. போலீஸா? தனியா இருக்கேன்.. பய்ம்மா இருக்குது..' வைரலான சிறுவன் செய்த காரியம்!
- “பொதுமக்களை துப்பாக்கியால் சுட்ட திருவாடுதுறை ஆதீனம் மெய்க்காவலர்”!... பதற வைக்கும் காரணம்!
- ‘ரூ.40 லட்சம் மதிப்புள்ள கணினிகள்’.. இந்திய மாணவர் செய்த காரியத்துக்கு 10 ஆண்டுகள் சிறை!
- ‘9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்று ஆச்சரியப்படுத்திய பெண்’.. 4.7 பில்லியன் பிரசவத்தில் ஒருமுறை நடக்கும் அதிசயம்!