"இதய தானம் கிடைக்கல".. பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்திய டாக்டர்கள் .. - வெற்றியில் முடிந்த வினோத ஆப்பரேஷன்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வரலாற்றிலேயே முதல்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட பன்றியின் இதயத்தை மனிதர் ஒருவருக்குப் பொருத்தி சாதனை படைத்திருக்கிறார்கள் அமெரிக்கவைச் சேர்ந்த மேரிலேண்ட் மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த மருத்துவர்கள்.

Advertising
>
Advertising

மேரிலேண்ட் பகுதியைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்பவர் கடந்த சில ஆண்டுகளாகவே இதய நோயினால் பாதிக்கப்பட்டுவந்துள்ளார். குறிப்பாக கடந்த சில மாதங்களில் அவரது உடல்நிலை மோசமாகவே, இதய - நுரையீரல் பைபாஸ் இயந்திரத்தின் மூலமாகவே அவர் உயிர்வாழ்ந்து வந்திருக்கிறார். நாள் முழுவதும் படுக்கையிலேயே தவித்த பென்னட், மீண்டும் இயல்பாக வாழ கிடைத்த இந்த வாய்ப்பிற்கு எவ்வித தயக்கமுமின்றி ஓகே சொல்லியிருக்கிறார்.

அறுவை சிகிச்சைக்கு முன்னர் இதுகுறித்துப் பேசிய அவர், "எனக்கு வாழ ஆசையாக இருக்கிறது. ஆகவே வாழ்வா? சாவா? போன்ற இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தேன். இதில் பல அபாயங்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், எனக்கு வேறு வாய்ப்புகள் ஏதும் இல்லை" என்றார்.

கடனில் மூழ்கிய Coffee Day நிறுவனத்தை தனியாளாக மீட்டெடுத்த சிங்கப்பெண் மாளவிகா ஹெக்டே..!!

கடந்த வெள்ளிக்கிழமை, பென்னட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது . "நான் இப்போது வெளியே சென்று மற்றவர்களைப்போல் வாழ முடியும் என நம்புகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நான்" என பென்னட் ஆனந்த கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

மரபணு மாற்றம்

உறுப்பு தானம் செய்த பன்றியின் உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இதயத்தில் 10 விதமான மரபணு மாற்றத்தை செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள். இதய திசுக்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜீனை நீக்குதல், மனிதர்களது உடம்போடு ஒத்துப்போகும் வகையில் புதிய 6 ஜீன்களை செலுத்துதல் ஆகியவற்றை மருத்துவர்கள் மேற்கொண்ட பிறகு, அந்த இதயம் பென்னட்டிற்கு பொருத்தப்பட்டுள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மைல்கல்

பென்னட்டிற்கு பன்றியின் இதயத்தை பொருத்தும் சிக்கலான ஆப்பரேஷனில் கலந்துகொண்ட மருத்துவர் பார்ட்லி கிரிஃப்த் இதுபற்றி பேசுகையில்," இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. இதன்மூலம் உறுப்பு தான பற்றாக்குறையை சரிசெய்யும் பயணத்தில் ஒருபடி நாம் முன்னேறியுள்ளோம்" என்கிறார்.

BCCI போட்ட பிளான் B - இந்த IPL சீரிஸ் முழுவதும் அங்க மட்டும்தான் நடக்கும் போலயே?

மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் பிற உயிர்களின் இதயத்தை மனிதர்களுக்குப் பொருத்தும் பிரிவின் (cardiac xenotransplantation program) துணைத் தலைவர் டாக்டர் முகமது மொய்தீன்," பல மாதங்களாக நீடித்துவந்த பல்வேறுகட்ட ஆய்வுகளின்மூலம் இந்த அறுவை சிகிச்சை தற்போது வெற்றியில் முடிந்துள்ளது" எனப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 110,000 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்து அதற்க்காக காத்திருப்பதாகவும் 6000 பேர் தங்களுக்கான உறுப்புக்கள் தானமாக கிடைப்பதற்கு முன்னேரே மரணமடைவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மேரிலேண்ட் பல்கலைக்கழகம் தற்போது நிகழத்திய இந்த ஆப்பரேஷன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நபர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

USA, US SURGEON, IMPLANT, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்