'பழிக்கு பழி வாங்குவோம்ன்னு'.... 'சும்மா லோலாய்க்கு சொன்னோம்ன்னு நினைச்சியா'... 'தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபர்'... பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காபூல் விமான நிலைய தாக்குதல் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து வரும் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேற உள்ளன. தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன.

இதற்கிடையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று முன் தினம் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அமெரிக்க வீரர்கள் ட்ரோன் மூலம் வான்வழித் தாக்குதலை நடத்தினார்கள். அதன்படி தாக்குதலானது ஆப்கானிஸ்தானின் Nangahar மாகாணத்தில் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதியைக் கொன்று விட்டதாக அமெரிக்க ராணுவத்தின் Central Commandன் செய்தி தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன், அதிரடியாக அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்