டாக்டர், இன்ஜினியர்களுக்கு 'தாலிபான்கள்' வைத்த செக்...! 'இதோடு நிறுத்திக்கங்க...' அப்புறம் நல்லா இருக்காது...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில் அங்கிருக்கும் மக்கள் பலர் தாலிபான்களிடம் உயிர் பிழைக்க முடியாது என சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

டாக்டர், இன்ஜினியர்களுக்கு 'தாலிபான்கள்' வைத்த செக்...! 'இதோடு நிறுத்திக்கங்க...' அப்புறம் நல்லா இருக்காது...!

மக்கள் மீட்பு பணியில் அமெரிக்கப்படை பல நாட்களாக உதவி வருகிறது. இந்நிலையில், தாலிபான்கள் அமெரிக்கவிற்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதுகுறித்து தாலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'எங்கள் நாட்டிலிருந்து மக்களை காப்பாற்றுகின்றோம் என்று சொல்லி கொண்டு, நாட்டிலிருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற நிபுணர்களை வெளியேற்றுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். இம்மாதிரியான செயல் ஆப்கானின் வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும்' என எச்சரித்துள்ளார்.

us stop doctors engineers from Afghan says talibans

அதுமட்டுமில்லாமல், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க ராணுவ படை வீரர்கள் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் மீட்புப் பணியை முடித்துக் கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார்.

ஆனால், ஐரோப்பிய நாடுகள் பல வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் அனைவரையும் அப்புறப்படுத்துவது என்பது சாத்தியமற்ற செயல். இதனால் தாலிபான்கள் இந்த கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத தாலிபான் அமைப்பை சேர்ந்த ஜபிப்புல்லா முஜாஹித்தோ, 'எங்களின் காபூல் விமான நிலையத்தில் 31-ஆம் தேதி வரை தான் உங்களுக்கு திறந்து வைக்க முடியும். மேற்கத்திய நாடுகளிடம் விமான வசதி உள்ளதால், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைவரையும் மீட்டுச் செல்வது அனைவருக்கும் நலம்' கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்