'தப்பா போய்டுவாங்க'... '21 வயசுக்கு கீழே செல்போன் பயன்படுத்த கூடாது'... தடை கோரும் மசோதா!
முகப்பு > செய்திகள் > உலகம்21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கோரும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இது அமெரிக்காவில் சாத்தியமா என, நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ், அமெரிக்க செனட் சபையில் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மசோதாவில் முக்கியமான குறிப்பிடப்பட்டுள்ள சரத்துகள் என்னவென்றால், ''செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போதிய முதிர்ச்சி கிடையாது. எனவே செல்போன் மூலம் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும்'' என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் மசோதாவின் முக்கிய அம்சமாக ''இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனையும், ரூ.72 ஆயிரம் அபராதமும் விதிக்க வேண்டும்'' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா நிச்சயம் நிறைவேற வாய்ப்பே இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் மசோதாவை தாக்கல் செய்த செனட் உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸும், ஒரு விழிப்புணர்வுக்காகவே தாக்கல் செய்தேன் என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இ- சிகரெட்' புகைப்பவர்களுக்கு வரும் பாதிப்புகள் என்ன..? பயன்பாட்டுக்கு தடை விதித்தது மத்திய அரசு...!
- இனி ‘திருமணத்திற்கு முன்’.. ‘ஃபோட்டோ ஷூட்’ செய்யத் தடை.. அமைப்புகளின் அறிவிப்பால் ‘அதிருப்தியில்’ இளைஞர்கள்..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘பிரபல கேப்டனுக்கு’.. ‘2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை’.. ‘ஐசிசி அதிரடி’..
- ‘ஆண் நண்பருடன் சேர்ந்து கொடூரக் கொலை’.. ‘நாடகமாடிய மனைவியை’.. ‘காட்டிக் கொடுத்த செல்ஃபோன்’..
- ‘தனியாக அழைத்து செல்ஃபோனில்’... ‘இளம் ஆசிரியர் காட்டியதைப் பார்த்து’... ‘அதிர்ந்து போன மாணவி’!
- ‘பிரபல கால்பந்து வீராங்கனையிடம்’.. ‘செல்ஃபி எடுக்கும்போது அத்துமீறி’.. ‘ரசிகர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- 'நேத்து இரவுல வந்த மாதிரி நைட்ல வரேன்'.. பேரம் பேசும்போது ரோல் ஆன திருடன்.. 'சிரிச்சு.. சிரிச்சு.. முடியலடா சாமி'...வைரல் ஆடியோ!
- ‘உள்ளங்கையில் அரிவாள் வெட்டு’.. ‘ஓட ஓட விரட்டிய கொள்ளையர்கள்’ சென்னை பீச்சில் இஞ்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்..!
- 'செல்ஃபோனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசிய நபருக்கு நிகழ்ந்த சோக சம்பவம்'!