'இதெல்லாம் சரிப்பட்டு வராது...' 'பொருளாதாரத்தடையை' விதிச்சாத்தான் 'சரிப்படும்...' 'அமெரிக்க' செனட் சபையில் நடைபெற்ற 'தரமான சம்பவம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் குறித்து தகவல்களை உரிய நேரத்தில் அளிக்க மறுத்தால், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை, அதிபர் டொனால்டு டிரம்ப் எடுக்க வேண்டும் எனக்கோரி, அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

'கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவே காரணம்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்டோர், தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். சீனாவிடம் இருந்து மிகப் பெரிய தொகையை இழப்பீடாக கோர உள்ளதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க செனட் சபையின் மூத்த எம்.பி.யும், டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான லிண்ட்சே கிரஹாம், செனட் சபையில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். அதனை, எட்டு எம்.பி.,க்கள் வழி மொழிந்துள்ளனர்.

இவர் தாக்கல் செய்துள்ள அந்த தீர்மானத்தில், 'கொரோனா வைரஸ் பரவல் குறித்து அமெரிக்கா நடத்தி வரும் விசாரணைக்கு சீனா ஒத்துழைப்பு தர வேண்டும். வைரஸ் குறித்த முழுமையானத் தகவல்களை அளிக்க வேண்டும். இவை குறித்து வலியுறுத்தி சீனாவுக்கு நெருக்கடி தர வேண்டும். மனித குலத்துக்கு ஆபத்தாக செயல்பட்டு வரும், சீனாவில் உள்ள வனவிலங்குகள் சந்தையை மூட வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை, அதிபர் டிரம்ப் எடுக்க வேண்டும்.' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்