'தனிமையில் இருந்த கணவன், மனைவி'... 'சிசிடிவியில் பதிவான மர்மம்'... உண்மை தெரிய வந்ததும் ஆடிப்போன தம்பதி!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் டெக்சாஸ் என்னும் பகுதியில், வீடுகளில் செக்யூரிட்டி கேமராக்கள் பொருத்தும் 'ADT' என்னும் நிறுவனத்தில் டெலஸ்போரோ அவிலஸ் (Telesforo Aviles) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்பகுதியிலுள்ள பல வீடுகள் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இந்த நிறுவனத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் எல்லாம் கேமராவை பொருத்தும் பணியில் அவிலஸ் ஈடுபட்டு வந்ததால், அங்குள்ள இடங்களில் எங்கெல்லாம் பெண்கள், முதியவர்கள், தம்பதியர்கள் மற்றும் குடும்பத்தினர் இருக்கிறார்கள் என்ற முழு விவரங்கள் அவிலஸ்க்கு தெரியும்.
இதனை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அவிலஸ், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள சுமார் 200 வீடுகளின் கேமராக்களை ஹேக் செய்து அங்கு என்னென்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியாமல் கவனித்து வந்துள்ளார். அதிலும் குறிப்பாக, தம்பதியர்கள் நெருக்கமாக இருப்பது, பெண்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட செயல்களின் வீடியோக்களை திருட்டுத்தனமாக கண்டு வந்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக, இந்த மோசமான செயலில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கிருந்த தம்பதியர் ஒருவருக்கு சந்தேகம் எழவே, இதுகுறித்து புகாரளித்துள்ளனர். பின்னர், தான் செய்த தவறை அவிலஸ் ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. செக்யூரிட்டி நிறுவனத்தின் மூலம், வீடுகளில் நடக்கும் அந்தரங்க செயல்களை தவறாக கண்காணித்து நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு வந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஒண்ணு வாங்குனா இன்னொன்னு 'ஃப்ரீ'..." 'உணவு' பொருளுக்காக 'பேஸ்புக்'கில் வந்த ஆஃபர்... 'ஆர்டர்' செய்த பெண்ணிற்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
- 'டேட்டிங் ஆப்பில் இளம்பெண் வச்ச கோரிக்கை'... 'ஒரு செகண்ட் யோசிக்காமல் இளைஞர் கொடுத்த போஸ்'... 'உடனே வந்த மெசேஜ்'... ஐடி இளைஞரை கதிகலங்க வைத்த இளம்பெண்கள்!
- 'லவ்வர் தானேன்னு அந்தரங்க வீடியோவை அனுப்பிய இளைஞர்'... 'வீடியோ கைக்கு வந்ததும் காதலி வச்ச டிமாண்ட்'... ஆடிப்போன சென்னை ஐடி இளைஞர்!
- 10 ரூபா தான், 'ஆன்லைன்'ல pay பண்ணிடுங்க... 'ஊறுகா'வ டெலிவர் பண்ணிடலாம்... - போனில் மெஸேஜ் தட்டிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’!
- "நெஞ்சுல நேர்மையும், செயல்ல நியாயமும் இருந்தா போதும்"... நீங்களும் 'சி.பி.ஐ.' ஆகலாம்... விளம்பரத்தை பார்த்து ஏமாந்துடாதிங்க மக்களே...