“நாங்க இருக்கோம்!” .. இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் டிரம்ப் பேசியது என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை நடுநிலையாக நின்று தீர்த்து வைத்து, அந்த நாடுகளுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்

Advertising
Advertising

அண்மைக்காலமாக இந்தியா சீனா இடையே எல்லை தகராறு காரணமாக இரு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் தனது நாட்டு ராணுவத்தினரை போருக்கு தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டரில் இந்திய-சீன எல்லைத் தகராறை தீர்க்க நடுநிலையாக இருந்து தீர்ப்பதற்கு உதவ தயாராக இருப்பதாக இரு நாடுகளிடமும் தெரிவித்திருக்கிறார். முன்னதாக காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க உதவுவதாக அமெரிக்கா கூறியிருந்தபோது இரு நாடுகளிடையேயான பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலைநீட்டலை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்