'இனி H-1B விசா தேர்விற்கு புதிய Rule???'... 'திடீர் பரிந்துரையால்'... 'இந்தியர்களுக்கு எழுந்துள்ள அடுத்த பெரும் சிக்கல்!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஹெச்1பி விசாவினை பெறுவதற்கு ஏற்கனவே கடுமையான விதிமுறைகள் உள்ள நிலையில் தற்போது புதிய தேர்வு முறை ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹெச்1பி விசாவினை அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்தியர்களாக அதிலும் குறிப்பாக இந்திய ஐடி துறையினராகவே உள்ள நிலையில், அதற்கு விதிக்கப்படும் அடுத்தடுத்த புதிய கட்டுப்பாடுகள் இந்தியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக டிரம்ப் நிர்வாகம் கணினிமயமாக்கப்பட்ட லாட்டரி முறையில் ஹெச்1பி விசா வழங்குவதை தடை செய்ய வேண்டும் எனவும், அதற்கு மாற்றாக ஊதிய அடிப்படையிலான தேர்வு முறைக்கு மாற்றுவதற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் வரலாறு காணாத அளவு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ள நிலையில் செய்யப்பட்டுள்ள இந்த பரிந்துரை வேலையினை இழந்து அழுத்தத்தில் உள்ள அமெரிக்க ஊழியர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய பரிந்துரை பற்றி பதிலளிக்க, பங்குதாரர்களுக்கு ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்படுள்ளதாகவும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்னும் ஒரு வாரத்திற்குள் வரவிருக்கும் நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ள முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், முதலில் அதிக சம்பளம் வாங்கும் சம்பளதாரர்கள் மட்டும் தேர்தெடுக்கப்படுவார்கள். இது ஹெச்1பி விசாதாரர்கள் மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் நலன்களை சிறப்பாக சமன் செய்யும் எனக் கூறப்படும் நிலையில், இதன்மூலம் அமெரிக்கர்களுக்கு அவரவர் வாய்ப்பு திரும்ப கிடைக்கும் எனவும், அமெரிக்க பொருளாரமும் வலுவடையும் எனவும் அதிபர் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் இந்த விசா மூலம் பணியமர்த்துவதற்கு முக்கியமான ஒரு காரணம் அமெரிக்கர்களை விட, வெளி நாட்டவருக்கு சம்பளம் குறைவு என்பதே ஆகும். ஆனால் இந்த புதிய நடைமுறை வந்தால் அந்த நிறுவனங்கள் ஒன்று வெளி நாட்டவருக்கு சம்பளத்தினை ஏற்றிக் கொடுக்க வேண்டும் அல்லது அமெரிக்கர்களையே பணியில் அமர்த்த வேண்டும். அதிகம் சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை என வெளி நாட்டவர்கள் பணியில் அமர்த்தப்படும் சாத்தியம் குறைவு என்பதால், இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்தால் ஹெச்1பி விசா தாரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையலாம் எனவே நிபுணர்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்