'பதவி காலம் முடிய இன்னும் 2 வாரம் தான் இருக்கு'... 'இந்தியர்களின் ஐடி வேலை கனவுக்கு வேட்டு வைத்த டிரம்ப்'... அதிர்ச்சியளிக்கும் முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எச்1பி விசா விவகாரத்தில் டிரம்ப் எடுத்துள்ள முடிவு இந்தியர்களின் ஐடி வேலைக்கான கனவைப் பாதிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்யை சுற்றி எப்போதுமே ஒரு பரபரப்பு ஓடிக் கொண்டே இருக்கும். அது அவர் பதவியில் இருக்கும்போதும், தேர்தலில் நின்ற போதும், தேர்தலில் தோல்வியைத் தழுவிய நேரத்திலும் அந்த பரபரப்பிற்குக் குறைவில்லை. அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் அதை ஏற்று கொள்ளாமல் நீதிமன்றம் வரை சென்றார். இருப்பினும் அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், ட்ரம்பின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி உள்ளிட்ட பல்வேறு விசாக்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை அமெரிக்கா வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா வழங்குவது கடந்தாண்டு 2 முறை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா உலக பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், அதன் தாக்கம் அமெரிக்காவில் கடுமையாக எதிரொலித்தது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்கர்கள் கணிசமாக வேலையிழந்துள்ள நிலையில் நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை அந்நாடு கொண்டுவந்துள்ளது. இந்த தடை தற்போது முக்கியத்துவம் பெற முக்கிய காரணம், டிரம்ப் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளது தான்.

இதன் தடையானது அமெரிக்க வேலை கனவுடன் உள்ள ஏராளமான இந்திய ஐ.டி.துறையினர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ட்ரம்ப் அரசின் விசா நடைமுறை கொடூரமானது எனக் கூறியிருந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், தான் அதிபராகப் பதவியேற்றவுடன் விசா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளப்போவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஜோ பைடன் பதவி ஏற்றதும் இந்த விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகப் பல இந்தியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்