VIDEO: கெட்ட வார்த்தையால் பத்திரிக்கையாளர்களை திட்டிய ஜோ பைடன்.. மைக் ஆஃப்ல இருக்குனு நினைச்சு வார்த்தைய விட்டுட்டாரு.. டிரெண்டிங் ஆகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா: மைக் ஆஃப் செய்துள்ளதாக நினைத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை ஒருமையில் கெட்ட வார்த்தை போட்டு திட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertising
>
Advertising

செய்தியாளர்கள் சந்திப்பு:

இன்று காலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்துவிட்ட தருவாயில் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பீட்டர் டூசி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கடுப்பில் இருந்த ஜோ பைடன்:

ஏற்கனவே பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு கடுப்பில் இருந்துள்ளார் ஜோ பைடன். செய்தியாளர்கள் சந்திப்பு முடிவடைந்து அனைவரும் கிளம்ப தயாராக இருந்தனர். மைக், கேமராக்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கையில் தான், கொதித்து போன ஜோ பைடன் கெட்ட வார்த்தை போட்டு பேசியுள்ளார். இந்த பண வீக்கம் தொடர்பான கேள்வி எழுந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததால் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் என நினைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அந்த செய்தியாளரை பார்த்து, 'அது மிகப்பெரிய சொத்து... அதிக பணவீக்கம்...முட்டாள்தனமான' என ஆரம்பித்து அந்த கெட்ட வார்த்தையால் திட்டியது மைக்கில் பதிவாகியுள்ளது.

சந்தேகம் வந்துரும்.. சாம்பார் தான் ஒரே வழி.. கணவனை கொல்ல மனைவி போட்ட பிளான்.. அதிர வைக்கும் வாக்குமூலம்

அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் கெட்டவார்த்தை:

அமெரிக்காவில் பொதுவாக அனைவரும் உபயோகப்படுத்தும் வார்த்தையாக இருந்தாலும் இடம் பொருள் ஏவல் என்று இருப்பதால் ஜோ பைடன்  தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

வெறும் 4 நாட்களில் 15,624 கோடி ரூபாய் நஷ்டம்.. கண்ணீரில் சொமேட்டோ முதலீட்டாளர்கள்

செய்தியாளரை ஜோ பைடன் ஒருமையில் திட்டும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட எதிர்க்கட்சிகள் லாட்டாரி அடித்தது போல இந்த சம்பவம் தொடர்பாக ஜோ பைடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், சமூக வலைத்தளங்கலான ட்விட்டர், முகநூல், இன்ஸ்டா போன்றவகைகளில் இந்த வீடியோவே தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்காக பலதரப்பு மக்களிடம் இருந்தும், பத்திரிக்கையாளர்களிடம் இருந்தும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

U.S. PRESIDENT, JOE BIDEN, REPORTER, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்