'நெஞ்சு பொறுக்குதில்லையே'... '8 கோடி தடுப்பூசி ரெடி'... ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலிருந்து வருகிறது.

கடந்த வரும் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. அதன் இரண்டாவது அலை படு வேகமாகப் பரவி வரும் நிலையில் பாதிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.37 கோடியைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.72 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்காவில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை என அந்நாட்டு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது. அதன்படி அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்தில் மாஸ்க் இல்லாமலேயே செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதனால் அமெரிக்காவில் விரைவில் இயல்பு நிலை திரும்ப உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் மற்ற உலக நாடுகளில் கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து அடுத்த 6 வாரங்களில் உலக நாடுகளுக்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு ஏழ்மையான நிலையில் உள்ள நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்