'நீங்க நம்பலனாலும் இதான் நெசம்!'.. 2021-ஆம் ஆண்டு 'அமைதிக்கான' நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட 'அதிபர் டிரம்ப்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump),  பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையேயான மத்தியஸ்தம் செய்ததற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்ப் பரிந்துரைக்கப்பட்டார். இது, சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் அரபு நாட்டிற்கும் இடையிலான முதல் ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் டிரம்பின் பெயரை நார்வே அரசியல்வாதியான, கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே என்பவர் அனுப்பியதாக  ஃபாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது. "அமைதி பரிசுக்கான மற்ற வேட்பாளர்களை விட டிரம்ப் நாடுகளுக்கிடையேயான சமாதானத்தை உருவாக்க அதிகமாக  முயற்சி செய்துள்ளார் என்று கருதுகிறேன்" என்று டைப்ரிங்-ஜெஜெட், ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் செப்டம்பர் 8 ம் தேதி அமெரிக்க அதிகாரி ஒருவர் இஸ்ரேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் (White House), அமெரிக்காவின் (America) மத்தியஸ்தத்துக்கு உட்பட்டு சுமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று தெரிவித்தார்.  இதன் மூலம் அக்டோபர் 26, 1994 இல் இஸ்ரேல்-ஜோர்டான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு பின்னர் இஸ்ரேலை அங்கீகரித்த முதல் பெரிய அரபு நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கான 2020-ஆம் ஆண்டு பரிந்துரைப் பட்டியலில் 318 வேட்பாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்