"அதிபர் டிரம்ப்புக்கு கொரோனாவா??? எப்படி வந்தது...?" - 'Twitter-ல் அவரே சொல்லும் காரணம்...!!!'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோருடைய கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் பரவி கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்நோய்க்கு ஆளான உலகத் தலைவர்கள் பலரும் முறையான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளனர். இதற்கிடையே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி இருவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக, "தேர்தலுக்கு ஹோப் ஹிக்ஸ் கடுமையாக ஓய்வு இல்லாமல் உழைத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நானும், எனது மனைவியும் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது பதிவிட்டுள்ள டிவீட்டில், "எனக்கும், மெளனியாவிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் நாங்கள் இருவரும் எங்களை தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறோம். இதிலிருந்து ஒன்றாக விடுபட்டு வருவோம்" எனக் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்காக ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சூழலில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட முக்கியமான உலக தலைவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்