எதுவா இருந்தாலும் அங்க வந்து பேசிக்கங்க.. ஏரியா தாண்டி வந்த கோழி கைது! மாட்டிகிட்டியே பங்கு..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா: பென்டகன் பாதுகாப்பு பகுதியில் சுற்றித் திரிந்த கோழி ஒன்றை அமெரிக்க காவல்துறை சிறைப்பிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.

Advertising
>
Advertising

அமெரிக்கா பென்டகனில் உள்ள பாதுகாப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கோழி ஒன்று காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் விலங்குகள் நல அமைப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் தலைமையகத்திற்கு அருகே திங்கள்கிழமை அதிகாலையில்  கோழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கோழி தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு துறை சார்பில் தகவல் வெளியானது. இதனை வர்ஜீனியாவின் ஆர்லிங்டனின் விலங்கு நல அமைப்பு சமூகவலைதளத்தில் தகவல் தெரிவித்தது. இதுகுறித்து அந்த விலங்கு நல அமைப்பு கூறியதாவது,  கோழி குறித்து அதிகாரிகள் எங்களிடம் தகவல் தெரிவித்தனர். அந்த கோழியை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்டு, எங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறது. அந்த கோழிக்கு புது வீடு கிடைக்கும்வரை எங்களிடம் பத்திரமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

மேலும், அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் செல்சியா ஜோன்ஸ் கூறுகையில், கோழி எந்த இடத்தில் காணப்பட்டது என்பது குறித்த சரியான தகவலை குறிப்பிட  முடியவில்லை. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கோழி எங்கே கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவலை வெளியிட எங்களுக்கு அனுமதி இல்லை.  பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் இருந்தது என்பதை மட்டுமே தெரிவிக்க முடியும் என்று கூறியதாக தெரிவித்தார்.

இடம் பெயர் தெரியாமல் வளர்க்கப்பட்டு வரும் கோழிக்கு ஹென்னி, பென்னி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் தலைமையகத்திற்குள் விலங்குகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கு வர்ஜீனியாவில் ஒரு சிறிய பண்ணையில் அக்கோழி வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் சமூகவலைதளத்தில் இந்தக்கோழியின் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

CBICKEN, AMERICA, AMERICA POLICE, VIRAL PHOTO, SOCIAL MEDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்