'எனக்கு கொரோனா வந்தது கூட ஷாக் இல்ல'...'ஆனா, ஹாஸ்பிட்டல் பில்லை பார்த்து ஆடிப்போன நோயாளி'... அட்டாக் வர வைக்கும் பில் தொகை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக மருத்துவமனை அளித்த பில் தொகை பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Advertising
Advertising

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரைச் சேர்ந்தவர், ராபர்ட் டென்னிஸ். உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்கை ரிட்ஜ் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து பூரண குணம் அடைந்த அவர், சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பினார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் ராபர்ட்டிற்கு சிகிச்சைக்கான பில்லை அனுப்பியது. அதனைப் பார்த்த போது தான் அவர் அதிர்ச்சியில் ஆடிப் போனார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதோடு ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு மருத்துவமனையில் 3 வாரங்கள் இருந்தது சேர்க்கப்படவில்லை.

இதில் மேலும் அதிர்ச்சி என்னவென்றால், அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அதற்கான கட்டணமும் சேர்த்து 1.5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.11.33 கோடி) எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ராபர்ட் டென்னிஸ் மனைவி கூறுகையில், நல்ல வேளையாக நாங்கள் காப்பீடு செய்திருந்தோம், இல்லை என்றால் என்ன செய்திருப்போம் என்றே தெரியவில்லை, என அச்சத்துடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்