'8 மாதம் கொரோனா வார்டில் வேலை'... 'வெளியான நர்ஸின் புகைப்படம்'... 'இதுதான்பா தியாகம்'... போட்டோவை பார்த்து உடைந்து போன நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

8 மாதங்கள் கொரோனா வார்டில் வேலை பார்த்து வந்த செவிலியர் ஒருவரின் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. இதில் மக்களைக் காக்க ஃபிரண்ட் லைன் வாரியர்ஸ் என அழைக்கப்படும் காவல்துறை, மருத்துவர்கள், வங்கி மற்றும் பிற பொதுத்துறை ஊழியர்கள் இந்த காலகட்டத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பாதுகாப்பிற்காக நிறையவே தியாகம் செய்துள்ளனர். இதில் முக்கியமானவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்.

இவர்கள் அனைவரும் கொரோனா குறித்த அச்சத்தை உணர்ந்து கொரோனா நோயாளிகளின் அருகிலிருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். அதிலும் மருத்துவம் செய்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டுப் பல செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உயிரிழந்த சோகமும் நடந்தது. அந்த வகையில் இரவு பகல் பாராமல், பணி நேரம் கவனிக்காமல் நோயாளிகளின் ஆரோக்கியம் மட்டுமே கருத்தில் கொண்டு சேவை செய்து வந்த செவிலியர்களில் ஒருவர் தான் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த கேத்ரின்.

கேத்ரின் ஏறத்தாழ கடந்த 8 மாதங்களாக கொரோனா நோயாளிகளை அவர்கள் அருகிலிருந்தே கவனித்து வந்துள்ளார். டென்னசி மாகாணத்தில் மட்டும் ஏறத்தாழ 3 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படம் ஒன்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஒருபுறம் 27 வயது நிரம்பிய மிக இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் தோற்றமளிக்கும் கேத்ரின், அடுத்த புகைப்படத்தில் PPE கிட் உடையில் பல மணிநேரம் மாஸ்க் அணிந்து மிகுந்த சோர்வுடன் தோற்றமளிக்கிறார். இந்த before, after புகைப்படத்தை ட்விட்டரில் ட்ரெண்டான How it started, How its going என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தார் கேத்ரின். இந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் இது தான் தியாகம் என அவரை புகழ்ந்துள்ள நிலையில், இந்த ட்வீட் ஏறத்தாழ 1 மில்லியன் லைக் மற்றும் 88 ரீ-ட்வீட் உடன் நெட்டில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு நாளுக்கு 12.5 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வேலை பார்த்து வந்த கேத்ரின், கடந்த சனிக்கிழமை அன்று வேலை முடிந்து PPE கிட் கழற்றும் போது, சட்டென நான் பட்டம் பெற்ற போது என் முகம் எப்படி இருந்தது என்ற எண்ணம் மனதில் தோன்றியது அதனால் தான், இந்த புகைப்படங்களைப் பதிவிட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்