கடலுக்கடியில கேட்ட 'அதிர' வைக்கும் சத்தம்...! கரெக்ட்டா 'அந்த இடத்துல' வர்றப்போ ஏன் 'இப்படி' நடந்துச்சு...? - அதிர்ச்சியில் உலக நாடுகள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் கடலில் நடந்த விபத்து பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் யூஎஸ்எஸ் கனெக்டிகட் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் கடந்த சனிக்கிழமையன்று நீருக்கு அடியில் சீனக் கடற்பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது கடலுக்கடியில் உரு தெரியாத ஏதோ ஒரு பொருளின் மீது மோதியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கூறிய அமெரிக்க அதிகாரிகள் இந்த மோதல் எதனால் நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், இதில் அமெரிக்கப் படையினர் 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதற்கு முன்பே தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனப் போர் விமானங்கள் நுழைந்ததாக பதற்றம் உண்டாகி இருக்கும் சூழலில் அமெரிக்க அணு ஆயுத கப்பல் மோதிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது.

தற்போது யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் அமெரிக்கப் பிராந்தியமான குவாம்-ஐ நோக்கிப் பயணித்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தைவான் நாட்டையே சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இந்த மோதல் நடைபெற்ற கடல் பகுதியின் பெரும்பாலான பகுதி தமக்கே உரியது என்று சீனா கூறி வருகிறது. ஆனால், அப்பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ். மலேசியா, தைவான் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவின் கூற்றை மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்