‘இந்த கொரோனா தடுப்பூசி நல்ல எஃபெக்ட் தெரியுது...’ ‘8 குரங்குகள வச்சு டெஸ்ட் பண்ணியாச்சு...’ எப்படி இது செயல்படுது...? - மகிழ்ச்சியில் மாடர்னா நிறுவனம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரசால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. கொரோனா வைரஸ் பரவிய காலம் முதல் இதற்கு காரணம் சீனா தான் குற்றம் சாட்டிவந்த அதிபர் டிரம்ப்பையே மாஸ்க் போட வைத்து விட்டது என்றே சொல்லலாம்.

மேலும் கொரோனா பரவிய காலம் தொட்டு அதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அமெரிக்காவின் பல மருத்துவ நிறுவனங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னாவின் கொரோனா தடுப்பூசியை குரங்குகளுக்கு போட்டு பரிசோதித்ததில், அது புதிய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதுடன், சுவாச மண்டலத்தில் கொரோனா வைரஸ்கள் பரவுவதை கட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் நடத்திய சோதனையில் முதலில் 8 குரங்குகளுக்கு 28 நாள் கால இடைவெளியில் 10 மைக்ரோகிராம் என்ற அளவுக்கு 2 தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும், அப்போது, கொரோனா வைரசின் புரதம் மனித செல்லில் ஒட்டிப்பிடிப்பதை ஒழிப்பதற்கான ஆன்டிபாடீஸ் உருவானது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசி மருந்திற்கு mRNA-1273 என பெயரிடப்பட்டுள்ளனர் மாடர்னா மற்றும் அமெரிக்காவின் ஒவ்வாமை-தொற்றுநோய் தேசிய கழக விஞ்ஞானிகள். அடுத்தகட்டமாக இந்த mRNA-1273 தடுப்பூசி, கடந்த திங்கள் அன்று அமெரிக்காவின் பல மருத்துவமனைகளில் துவங்கியது. சுமார் 30000 பேர் இந்த சோதனையில் பங்கேற்க பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்