சீனாவில் ‘கொரோனாவை' பரப்பியது 'அமெரிக்கா' தான்... 'மருத்துவ ஆய்விதழ்' மூலம் வெளியான 'அதிர்ச்சித்' தகவல்... வெளிப்படையாக 'மன்னிப்பு' கேட்க சீனா 'வலியுறுத்தல்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவுக்கு கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க ராணுவம்தான் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் சீனாவின் 'பயோ வார்' முயற்சியின் போது தவறதுலாக வெளியான வைரஸ் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த சீனா முதலில் இந்த வைரஸ் பாம்புகள், எறும்புத்தின்னி போன்ற உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறியது.

தற்போது வைரஸ் பரவலுக்கு புதிய காரணத்தை சீனா தெரிவித்து வருகிறது. அமெரிக்க ராணுவம் தான் திட்டமிட்டு சீனாவில் கொரோனாவை பரப்பி விட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீன அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் லான்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் கடந்த ஜனவரி 23ம் தேதி வூகானிலிருந்து அமெரிக்கா வந்த பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்றும் அந்த பெண் மூலம் அவரது கணவருக்கும் அத்ந நோய் பரவி பின்னர் இருவரும் குணமடைந்தனர் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் மூலமாகத்தான் அமெரிக்கா வூகானில் கொரோனாவை பரப்பியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் (Zhao Lijian) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனாவை சீனாவில் பரப்பியது தொடர்பாக அமெரிக்க பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

CORONA, CHINA, AMERICA, COVID-19

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்