'கொரோனான்னு ஒண்ணு இல்ல'... 'எல்லாரும் புருடா விடுறாங்க'... 'வீராப்பா சுற்றிய இளைஞர்'... இறுதியில் நடந்த பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா என்று ஒன்று இல்லை, கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனக் கூறி சுற்றிய இளைஞருக்கு நடந்த துயரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா உலகையே ஒரு ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதுவரை நமது பாதுகாப்பு என்பது நம் கையில் மட்டுமே உள்ளது. குறிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முககவசம் அணிவது மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி. நான் மாஸ்க் அணியமாட்டேன் எனக் கூறி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூட தற்போது மாஸ்க் அணியத் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை குருட்டுத்தனமாகப் பின்பற்றி மாஸ்க் அணியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒஹையோவைச் சேர்ந்த ரிச்சர்டு ரோஸ் என்ற இளைஞர் தீவிரமான டிரம்ப் ரசிகர். முன்னாள் ராணுவ வீரனான இவர், சமூக ஊடகங்களில் கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று கூறி பதிவுகளைப் போட்டு வந்தார்.
கடந்த ஏப்ரல் 28 அன்று பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், நான் மாஸ்க் எல்லாம் வாங்க மாட்டேன், கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று எழுதியிருந்தார். இந்நிலையில் ஜூலை 1ஆம் தேதி ரிச்சர்டு ரோஸிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட ரிச்சர்டுக்கு , இறுதியில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
டிரம்பை தீவிரமாகப் பின்பற்றி வந்த ரிச்சர்டு, ஜூலை 4ஆம் தேதி பரிதாபமாக கொரோனாவுக்கு பலியானார் மாஸ்க் போடமாட்டேன் எனக் கெத்தாகச் சுற்றிய நபர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது, எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா'... 'நானும் டெஸ்ட் பண்ணிட்டேன்'... ரிசல்ட்டை ட்விட்டரில் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்!
- நாங்க 'சாதிச்சிட்டோம்'...கொரோனாவுக்கு எதிரான 'தடுப்பு' மருந்து... மனிதர்கள் மீது 'சோதனை' நடத்தி வெற்றி பெற்ற 'முதல்' நாடு!
- 'சென்னை'க்கே போய்டலாம்... பிளைட்ல 'ரிட்டர்ன்' டிக்கெட் போட்டு... மூட்டை,முடிச்சோடு 'திரும்பி' வரும் மக்கள்... என்ன காரணம்?
- 'நல்ல' செய்தி சொன்ன சுகாதார அமைச்சகம்... அதோட 'இந்த' விஷயத்திலயும் 'இந்தியா' தான் கெத்தாம்!
- மதுரையில் மேலும் 319 பேருக்கு கொரோனா!.. சென்னையை அடுத்து வேகமெடுக்கும் மாவட்டம் 'இது' தான்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் மேலும் 68 பேர் கொரோனாவுக்கு பலி!.. மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று!?.. முழு விவரம் உள்ளே
- ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனாவா?.. அமிதாப், அபிஷேக் பச்சன்களைத் அடுத்து, வெளியான 'பரபரப்பு' பரிசோதனை முடிவுகள்!
- “கொரோனாவால் பாதிக்கப்பட்ட, உயர் கல்வி அமைச்சரின் தற்போதைய நிலை இதுதான்!”.. மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!
- ’தமிழகத்தில்' கொரோனா எப்போது ’உச்சம்’ தொடும்?... எப்போது முடியும்? - மற்ற மாநிலங்களின் நிலை என்ன? - வெளியான ’புதிய’ ஆய்வு தகவல்!
- “என்ன ஆனாங்கனே தெரியல.. உண்மைய சொல்லியிருந்தா எனக்கும் இதான் நடந்திருக்கும்!”.. ‘மிரளவைக்கும்’ ரகசியங்கள்.. போட்டு உடைத்த சீன பெண் விஞ்ஞானி!