‘மனைவியின் காதலன் மீது’.. ‘வழக்குத் தொடர்ந்த கணவருக்கு’.. ‘ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது திருமண முறிவுக்குக் காரணமான மனைவியின் காதலன் மீது வழக்குத் தொடர்ந்த கணவருக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் ஹோவர்ட் என்பவருக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் அவருடைய மனைவி சமீபத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கும் இடையே பெரிதாக பிரச்சனைகள் எதுவும் இல்லாத நிலையில் கணவர் வேலையில் அதிக நேரம் செலவிடுவதாகவும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதில்லை எனவும் கூறி அவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் இது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை, நீதிமன்றத்தை நாடிப் பலன் இல்லை என நினைத்த கெவின் மனைவி விவகாரத்தில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக உணர்ந்துள்ளார். பின் தனியார் டிடெக்டிவை இதற்காக அவர் அணுகியுள்ளார். அவர்மூலம் தனது மனைவியுடன் வேலை செய்யும் ஆண் நண்பருக்கும் அவருக்கும் இருக்கும் நெருக்கமே தங்கள் விவாகரத்துக்குக் காரணம் என்பது கெவினுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்த அவர் தனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடியக் காரணமாக இருந்த அந்த நபருக்கு எதிராக Alienation of affections என்ற சட்டப்படி வழக்குத் தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய், மிசிசிப்பி, நியூ மெக்ஸிகோ, தெற்கு டகோட்டா மற்றும் உட்டா ஆகிய பகுதிகளில் மட்டும் அமலில் உள்ள இந்த சட்டப்படி, ஒருவர் தனது திருமண முறிவுக்குக் காரணமான மூன்றாம் நபர் மீது வழக்குத் தொடரலாம். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமண முறிவுக்குக் காரணமான அந்த நபர் கெவினுக்கு 7 லட்சம் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 5 கோடி) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

US, HUSBAND, WIFE, LOVER, MARRIAGE, DIVORCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்