"உலகத்துல பழமையான மொழி தமிழ்தான்..எங்க போனாலும் தமிழ்ல தான் பேசுவேன்".. வியக்க வைக்கும் அமெரிக்க நபர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் சரளமாக தமிழ் பேசுவது, பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜியோமெனிக் (Xiaomanyc). நியூயார்க்கில் வசித்துவரும் இவர் தமிழ்மொழி மீது தீரா காதல் கொண்டுள்ளார். அமெரிக்காவில் தமிழர்களை எங்கு கண்டாலும் தமிழிலேயே பேசும் இவர், பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறார். இவர் சமீபத்தில் நியூயார்க்கில் இருந்த உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது, தனக்கு வேண்டிய உணவுகளை தமிழிலேயே ஆர்டர் செய்திருக்கிறார். இதனால் அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

தமிழ் மீது கொண்ட காதல் 

தன்னுடைய தமிழ் ஆர்வம் குறித்து பேசிய இவர்,"உலகின் பழமையான மொழியான தமிழை கற்றுக்கொண்டதை பெருமையாக கருதுகிறேன். இன்றும் பயன்பாட்டில் இருக்கும் பழமையான மொழிகளில் தமிழே முதன்மையானதாகும். இந்தியா மற்றும் இலங்கையில் பரவலாக பேசப்பட்டாலும் அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் குறைவு. ஆதலால், நியூயார்க்கில் உள்ள உணவகங்களில் தமிழர்கள் அதிகம் வந்துசெல்லும் பகுதிக்குச் சென்று அவர்களுடன் பேசுகிறேன். தமிழ் அழகான அதே நேரத்தில் சவாலான மொழி" என்கிறார்.

"தங்கள் சொந்த கலாச்சாரத்தை விடுத்து வித்தியாசமான கலாச்சாரம் கொண்ட ஒரு நாட்டில் வாழும் எவரும், வீட்டை நினைவுபடுத்தும் ஒன்றைப் பார்ப்பதை அல்லது கேட்க விரும்புவார்கள். இதுவே, என்னை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்க காரணமாக ஆகிறது" என்கிறார் இவர்.

விருந்து

அமெரிக்காவில் உள்ள உணவகங்களில் குறிப்பாக தமிழர்களால் நடத்தப்படும் உணவகங்களுக்கு விரும்பி செல்லும் இவர், அங்குள்ளவர்களிடம் தமிழிலேயே பேசுகிறார். அப்படி ஒருமுறை நியூயார்க் நகரத்தில் உள்ள ஹோட்டலுக்குச் சென்ற இவர் தமிழில் சரளமாக பேச, அந்த ஹோட்டலின் உரிமையாளர் திகைத்து நின்றிருக்கிறார்.

தமிழ் மொழிமீது தனக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்தும், அதனை கற்றுக்கொள்ள தான் எடுத்த முயற்சிகள் குறித்தும் ஜியோமெனிக் சொல்ல, அவருக்கு விருந்தே அளிக்கப்பட்டிருக்கிறது அந்த ஹோட்டலில். அமெரிக்க வாழ் தமிழர்கள், ஜியோமெனிக்கை சந்திக்கும்போது மிக்க மகிழ்ச்சியடைவதாக கூறுகின்றனர்.

TAMIL, LANGUAGE, XIAOMANYC, தமிழ், மொழி, அமெரிக்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்