நான் 'அத' யூஸ் பண்ண தொடங்கின உடனே... என் கன்னத்துல 'பளார்'னு ஒண்ணு போடணும் சரியா...? அதுக்கு தான் உனக்கு சம்பளம்...! - 'வைரல்' வீடியோவிற்கு 'எலான் மஸ்க்' ரியாக்சன்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தன்னை அடிப்பதற்கென்றே ஒரு பெண்ணை செட் செய்து வைத்துள்ள சம்பவம் எலான் மஸ்க் வரை சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்த பிளாகரும், PAVLOK ஃபிட்னெஸ் பேண்ட் நிறுவனருமான மணீஷ் ஷெத்தி தன்னை அறைவதற்காகவே பெண்ணை ஒருவரை வேலையில் வைத்துள்ளார்.

இந்தப் பெண்ணின் வேலை மணீஷ் முகநூல் பயன்படுத்தும் போதெல்லாம் அறைவது தான். இதற்காகவே மணீஷ் அவர்கள் தன் சீட்டின் பக்கத்திலேயே அந்தபெண்ணுக்கு நாற்காலியும் போட்டுக் கொடுத்துள்ளார்.

அடி கொடுக்கும் பணிக்காக அந்த பெண்ணுக்கு ஒரு மணி நேரத்திற்கு 8 அமெரிக்க டாலர்களை சம்பளமாக கொடுத்து வருகிறார் மணீஷ். ஒருமுறை மணிஷ் பேஸ்புக் பயன்படுத்தும் போது அந்தப் பெண் ஓங்கி ஒரு அறை விட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது மணிஷை அந்த பெண் அறையும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வைரலாகிய வீடியோ டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வரை பரவியுள்ளது. அதற்கு அவர் அந்த வீடியோவிற்கு கீழே 'தீ' ஸ்மைலியை ரிப்ளையாக கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்து மணிஷ் கூறும் போது, 'அந்த பெண்ணை வேலைக்கு வைத்த பின் தான் என் புராடெக்ட்டிவிட்டி அதிகரித்துள்ளது. இந்த வழக்கம் எனக்கு எப்போதிலிருந்தோ இருக்கிறது. இப்போது இந்த வீடியோ வைரலாகி எலான் மஸ்கின் கவனத்தை பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.' எனக் கூறியுள்ளார்.

 

BEAT, FACEBOOK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்