எனக்கு வேற வழி தெரியல சார்..Office ஐ வீடாக பயன்படுத்தும் ஊழியர்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஊதியம் போதவில்லை என அலுவலகத்திலேயே பணியாளர் ஒருவர் வசிக்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட இயக்குனருக்கு மிக உயரிய பாதுகாப்பு.. வெளிவந்த புதிய தகவல்..!
கொரோனா
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து வீட்டில் இருந்தே பணிபுரியும்படி பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு உத்தரவிட்டன. இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரும்பான்மையான நிறுவங்கள் இன்னும் 'வொர்க் ஃப்ரம் ஹோம் ' மோடில் தான் இயங்கி வருகின்றன. இந்நிலையில், வீட்டு வாடகையும் கொடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கும் சென்றுவர முடியவில்லை எனக்கூறி அலுவலகத்தில் குடியேறி இருக்கிறார் அமெரிக்கர் ஒருவர்
வீடான அலுவலகம்
அமெரிக்காவில் வசித்துவரும் சைமன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்தார். அந்த வீடியோவில்,"நான் என்னுடைய அலுவகத்திலேயே தங்கப் போகிறேன். இதனால் என்னுடைய உடமைகளை எடுத்து வந்திருக்கிறேன். என்னுடைய அப்பார்ட்மெண்டை என்னுடைய அலுவலகத்திற்கு மாற்றியுள்ளேன். ஏனென்றால் நிறுவனம் எனக்கு இரண்டிற்கும் போதிய அளவு பணம் கொடுப்பதில்லை. போராட்டம் செய்யும் விதமாக இந்த செயலில் இறங்கி உள்ளேன். என்னால் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று பார்ப்போம்" என சைமன் குறிப்பிட்டுள்ளார்.
மனுஷன் ஏதோ விளையாடுகிறார் போல, என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், உண்மையாகவே சைமன் தனது அலுவலகத்தில் வசிக்க துவங்கியுள்ளார். டேபிளின் அடியில் தூங்கிக்கொள்ளும் சைமன், அலுவலக ஃபிரிட்ஜில் தான் எடுத்துவந்திருந்த உணவுகளை அடுக்கியிருக்கிறார். தேவைப்படும்போது அவற்றை உண்ணும் இவர், அலுவலகத்தின் அடுத்த கட்டிடத்திற்கு சென்று குளிக்கிறார்.
வைரல் வீடியோ
இப்படி தான் செய்யும் புது வித போராட்டத்தை சைமன் இன்ஸ்டாகிராமில் வெளியிட, நெட்டிசன்கள் மத்தியில் அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. 'பலரும் இப்படியான சூழ்நிலையில் தான் உள்ளனர்' என்றும் 'பெட்ரோல் விலையும் அதிகரிக்கிறது, ஆகவே இதுதான் பெஸ்ட் வழி' என்றும் கமெண்ட்களை அள்ளி வீசினர் சமூக வலைதள வாசிகள்.
ஆனால், வீடியோ வெளியிட்ட சில நாட்களிலேயே சைமனை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி இருக்கிறது அவருடைய நிறுவனம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உக்ரைன் அதிபர் பேசி முடிச்சதும்.. ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று கைத்தட்டிய அமெரிக்க எம்.பிக்கள்.. அப்படி என்ன பேசினார் ஜெலன்ஸ்கி..?
- என்னது ஒரு லிட்டர் பால் இவ்ளோ விலையா..? போராட்டத்தில் இறங்கிய மக்கள்..என்ன நடக்கிறது இலங்கையில்..?
- 'உபாதை போன கேப்பில் ரூ.2.50 கோடி அபேஸ்'.. மதுரையையே மிரள வைத்த வழிப்பறி..கெத்து காட்டிய காவல்துறை..!
- ‘பொய்.. நம்பாதீங்க’.. ரஷ்ய செய்தி நேரலையில் திடீரென பதாகையுடன் புகுந்த இளம் பெண்.. அதுல என்ன எழுதியிருக்கு? பரபரப்பு வீடியோ..!
- "என் மனைவி பெண்ணே கிடையாது".. உச்ச நீதிமன்றத்தில் கணவர் கொடுத்த வித்தியாசமான விவாகரத்து மனு..!
- ரயில்வே ஸ்டேஷனில் வலிப்பு நோயால் சரிந்த நபர் .. ஓடிப்போய் உதவிய பெண் போலீசுக்கு குவியும் பாராட்டுகள்..!
- கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.. இளைஞர் போட்ட வேறலெவல் ப்ளான்.. செம வைரல்..!
- வாக்கிங் போன மனைவிய காணோம்.. புகார் கொடுத்த கணவன்.. புதருக்குள்ள இருந்து கேட்ட செல்போன் சத்தம்..மாஸ்டர் பிளானை கண்டுபிடித்த போலீஸ்..!
- "நம்ம போர் விமானங்கள்ல சீனா கொடிய கட்டுங்க.. ரஷ்யா மேல குண்டு போடுங்க".. டொனால்டு ட்ரம்ப் சொன்ன விபரீத யோசனை..!
- “நான் பெரிய ரவுடின்னு எல்லாத்துக்கும் காட்டணும்”.. திட்டமிட்டு பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. கைதான நபர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!