ஹெவி டிராஃபிக்...! 'வண்டி ஒரு இன்ச் நகர்ந்துருந்தா கூட காருக்குள்ள இருந்துருப்பாரு...' 'கடுப்பாகி இளைஞர் செய்த காரியம்...' - ஆஹா... கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் லூசியாணா பகுதியைச் சேர்ந்த ஜிம்மி இவன் ஜென்னிங்ஸ் (26) என்ற இளைஞர் காரில் சென்றுகொண்டிருந்தார். அவர் சென்ற பாதையில், முன்னே சென்ற ட்ரக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனது.

இந்த சம்பவம் அந்தப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி வாகனங்களை நகரமுடியாத நிலைக்கு தள்ளியது. சுமார் 2 மணி நேரமாகியும் எந்த வித அசைவும் இல்லமால் வாகனங்கள் இருந்துள்ளது.

இதனால் பொறுமையை இழந்த ஜிம்மி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென காரில் இருந்து இறங்கி ஓடி வந்து பாலத்தின் மீதில் இருந்து ஆற்றுக்குள் குதித்துள்ளார்.

அவர் குதித்த ஆறு பாலத்திலிருந்து சுமார் 100 அடி உயரம் இருக்கும். அதோடு அந்த ஆற்றில் முதலைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இளைஞர் ஜிம்மி செய்த இந்த சம்பவம் பாலத்தில் நின்றிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆற்றில் குதித்த ஜிம்மி சுமார் 3 மணி நேரம் கழித்து அருகில் உள்ள தீவு ஒன்றில் கரை சேர்ந்தார். அதுமட்டுமில்லாமல் ஜிம்மியை போலீசார் குற்றம், அத்துமீறல் காரணங்களுக்காக கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜிம்மி தன் பேஸ்புக்கில் பதிவிட்டபோது, 'அந்த ஆற்றில் முதலைகள் இருப்பது எனக்கு தெரியாது. கீழே விழுந்த வேகத்தில் எனது இடது கையில் காயம் ஏற்பட்டு, என்னால் நீந்த முடியவில்லை, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் எனது இடது கையை பயன்படுத்த முடியவில்லை.

சில நேரங்களில் நான் ஆற்றில் உள் இழுக்கப்பட்டேன் அப்போது உடனடியாக வலது கையை பயன்படுத்தி மேலே வந்தேன். இப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. சாதாரணமாகத் தான் நினைத்தேன், ஒரு வழியாக அருகே இருந்த தீவில் கரை சேர்ந்தேன்' என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்