அம்மாடியோவ்..! இவ்வளத்தையுமா அமெரிக்கா விட்டுட்டு போய்ட்டாங்க.. ‘தலைசுற்ற வைக்கும் மதிப்பு’.. பீதியில் உலக நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச்சென்ற ராணுவ தடவாளங்களால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டு அரசுக்கும் தாலிபான்களுக்கு இடையே கடந்த 20 ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தது. அதில் ஆப்கான் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் உதவி வந்தது. இந்த நிலையில் ஆப்கானில் உள்ள அமெரிக்க படையை திரும்ப பெறுவதாக சமீபத்தில் அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
இதனால் வேகவேகமாக ஆப்கானின் முக்கிய நகரங்களை தாலிபான்கள் கைப்பற்ற ஆரம்பித்தனர். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானை முழுவதுமாக தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தாலிபான்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 31 நள்ளிரவுக்குள் வெளியேறி விட வேண்டும் என தாலிபான்கள் எச்சரிக்கை செய்தனர். ஆனால் இந்த கெடும் முடிவதற்கு 20 மணிநேரத்துக்கு முன்னதாகவே அமெரிக்க படைகள் அனைத்தும் ஆப்கானை விட்டு வெளியேறின.
இந்த நிலையில், 6 லட்சம் கோடி மதிப்புள்ள ராணுவ தடவாளங்களை ஆப்கானிஸ்தானிலேயே அமெரிக்கா விட்டுச்சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 75,000 ராணுவ வாகனங்கள், 200-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 6,00,000-க்கும் அதிகமான துப்பாக்கிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 84 சதவீத நாடுகளிடம் இல்லாத Black Hawk ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விட்டுச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் தற்போது தாலிபான்கள் வசம் வந்துள்ளதால் உலக நாடுகள் பீதியில் உள்ளன.
இதுதொடர்பாக பேசிய அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி கென்னத் மெக்கன்சி, காபூலில் இருந்து அமெரிக்க படை வெளியேறுவதற்கு முன்னதாக 73 போர் விமானங்கள், நவீன ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இயங்க முடியாத அளவிற்கு செயலிழக்க வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஓவரா ஆடுறாங்க...! அவங்க மெயின் 'சுவிட்ச்'லையே கை வைப்போம்...! - 'பஞ்சஷேர்' போராளிகளை 'அடக்க' தாலிபான்கள் போட்ட ராஜதந்திரம்...!
- 'அது தீவிரவாதிகளோட வண்டி தான்'!.. கண் இமைக்கும் நேரத்தில்... சாம்பலாக்கிய அமெரிக்க ராணுவம்!.. பக்கத்தில போய் பார்த்தா... குலை நடுங்கவைக்கும் ட்விஸ்ட்!
- 'உலகத்தோட எல்லா தொடர்பும் முடிந்தது'... 'புகைப்படத்துடன் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு'... துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் கொண்டாட்டம்!
- பாகிஸ்தான் எங்களுக்கு ரெண்டாவது வீடு.. ‘இந்த நேரத்துல இந்தியாவுக்கு ஒன்னு சொல்லிக்கிறோம்...!’.. தாலிபான் தலைவர் பரபரப்பு பதில்..!
- 'அவரு தான்!.. அவரு தான'?.. பதுங்கியிருந்த உச்ச தலைவர்!.. அதிர்ச்சியில் வாயடைத்துப் போன தாலிபான்கள்!.. நடுங்கிப்போயிருக்கும் மக்கள்!
- 'ஜன்னலை உடைத்து... வீட்டுக்குள் விழுந்து வெடித்த ஏவுகணை'!.. காபூலில் தீவிரவாதிகளின் 'அடுத்த' பயங்கர ஸ்கெட்ச்!
- 'என் புள்ளைய காப்பாத்துங்க சார்'!.. காபூல் குண்டுவெடிப்பில் பிரிந்து சென்ற 23 மாத குழந்தை!.. அமைச்சர்களிடம் மண்டியிட்டு கெஞ்சும் 19 வயது இளம் தாய்!!
- அப்பாவோட தாலிபான்கள் 'டீ' குடிச்சிட்டு இருந்தாங்க...! 'குடிச்சு முடிச்ச உடனே தரதரவென இழுத்திட்டு போய்...' - பிரபல 'நாட்டுப்புற' பாடகருக்கு நடந்த கொடூரம்...!
- 'என்னடா இங்க இவ்ளோ பொட்டி இருக்கு'?.. 'அமெரிக்காகாரன் எதையோ விட்டுட்டு போய்ட்டான்ணே'!.. 'ஓபன் பண்ணா... தாலிபான்கள் செம்ம ஷாக்'!!
- 'காபூலை தரைமட்டமாக்க... வெறிபிடித்து அலையும் தீவிரவாதிகள்'!.. 'யாராலும் தடுக்க முடியாது' என அதிகாரப்பூர்வ அறிவிப்பு!