இந்தியா வரும் பயணிகளுக்கு ‘க்ரீன் சிக்னல்’ காட்டிய அமெரிக்கா.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட CDC..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியா மீதான பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இந்தியா வரும் பயணிகளுக்கு ‘க்ரீன் சிக்னல்’ காட்டிய அமெரிக்கா.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட CDC..!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தன. அதில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தற்போது தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

US latest travel advisory for India

முன்னதாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும் பயணிகள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஆனால் அந்நாட்டில் இருந்து இந்தியா வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

US latest travel advisory for India

இந்த நிலையில் இந்தியா மீதான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்காவும் தளர்த்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு CDC (Centers for Disease Control and Prevention) எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘அமெரிக்காவில் இருந்து அதிகபட்ச எச்சரிக்கையுடன் இந்தியாவுக்கு பயணம் செய்யலாம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிதமாக உள்ளது. அதனால் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அங்கு சென்றால் தீவிர பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான்’ என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்