ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் சுட்டுக் கொலை.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.. யார் இந்த அபு இப்ராஹிம் அல் குரைஷி?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டரில் பக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் சுட்டுகொல்லப்பட்டதாக பதிவிட்டுள்ளார்.
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்:
ஈராக் போரின் போது உருவான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
ஈராக்கில் கலிஃபா ஆட்சி:
அதோடு ஈராக்கில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கைப்பற்றி வருவதோடு ஈராக்கில் கலிஃபா ஆட்சியை நிறுவி, அதை சிரியா முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்படுவது அனைவரும் அறிந்ததே.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி சுட்டுக்கொலை:
இதற்கு முன் அல்கொய்தா அமைப்பின் தலைவரான பின் லேடனை கொன்று வீழ்த்திய பின், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிறகு அமெரிக்கா குறிவைத்து வந்தது. அதன்படி தற்போது, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு அல் ஹாசிமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதுக்குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'நேற்றிரவு எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நன்றி, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷியை போர்க்களத்தில் இருந்து அகற்றியுள்ளோம்' எனக் கூறியுள்ளார்.
யார் இந்த அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி?
சிரியா மற்றும் இராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தனர். இராக் கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றை இணைத்து தனி முஸ்லிம் நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதன் முதல்கட்டமாக, சில ஆண்டு களுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள இராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை துரத்தி விட்டு முஸ்லிம் அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.
மொசூல் நகரில் ஆட்சிபீடமாக அமைத்து தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்றும் சுருக்கி கொண்டனர். சிரியா, இராக் ஆகிய நாடுகளின் சில பகுதிகள், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இதன் தலைவராக இருந்து வந்தவர் இராக்கை சேர்ந்த அபுபக்கர் அல் பாக்தாதி. இவரை கடந்த 2019ல் டிரம்ப் தலைமையில் இருந்த அமெரிக்க அரசின் உத்தரவின் இதே அமெரிக்க துருப்பு படைகள் கொன்றது. அவரின் மரணத்துக்குப் பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றவர் தான் இந்த அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி.
முந்தைய தலைவர் அல் பாக்தாதியைக் கொன்றுவிட்டதாக மசந்தோஷப் பட வேண்டாம். இதற்கு நாங்கள் பழி தீர்ப்போம்" என சபதமிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்கா வரை எதிரொலித்த ராகுல் காந்தி பேச்சு.. பாகிஸ்தான்-சீனா நட்பு பற்றி தெரிவித்த கருத்துக்கு பதிலடி
- அமெரிக்காவில் இந்த ஆண்டின் முதல் தண்டனை.... காதலிக்காக 25 வயதில் செய்த தவறு... இனி இவரை காப்பாத்த முடியாது!
- தம்பி வண்டிய நிப்பாட்டு.. ரோட்டோரம் விறுவிறுன்னு கடைக்குள்ள போன ஜோ பிடன்.. 'என்னா டேஸ்டு'
- VIDEO: கெட்ட வார்த்தையால் பத்திரிக்கையாளர்களை திட்டிய ஜோ பைடன்.. மைக் ஆஃப்ல இருக்குனு நினைச்சு வார்த்தைய விட்டுட்டாரு.. டிரெண்டிங் ஆகும் வீடியோ!
- பேரழிவை சந்திக்க ரெடியா? முடிஞ்சா 'அந்த நாட்டுக்கு' போங்க பார்க்கலாம்.. ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்
- 5ஜி தொழில்நுட்பத்தால் விமான சேவைக்கு பாதிப்பா..? நிறுவனங்கள் பரபரப்பு புகார்..!
- உங்க கணவர் கிட்ட இருந்து 'லெட்டர்' வந்துருக்கு.. ஏங்க அவரு இறந்து 6 வருஷம் ஆச்சு.. ஆனா அவரோட கையெழுத்து தான்.. நடந்தது என்ன?
- அமெரிக்காவில் பெற்ற மகளையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை... காரணத்தைக் கேட்டு திகைத்து போன போலீஸ்!
- 130 வருச பழைய பெட்டி.. ‘உள்ள இது கூட இருக்கலாம்’.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம்..!
- இவங்களுக்கெல்லாம் ‘No’ இன்டர்வியூ.. ஒமைக்ரான் பரவலால் ‘H-1B’ விசா வழக்குவதில் தளர்வு.. அமெரிக்கா அதிரடி அறிவிப்பு..!