“இனி புதின் இதிலிருந்து தப்பிக்கவே முடியாது”.. பகிரங்க குற்றச்சாட்டு வைத்த பைடன்.. பரபரப்பில் உலக நாடுகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை போர்க்குற்றவாளி என கூறிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதனிடையே ரஷ்யாவின் செயலை கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பிற நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுக்க உதவும்.

இந்த தீர்மானம் குறித்து ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சக் ஸ்கூமர் கூறுகையில், ‘இந்த அவையில் உள்ள அனைவரும் ஒரு விஷயத்தில் உடன்பட்டுள்ளோம். ஜனநாயகவாதிகள், குடியரசுவாதிகள் என்ற பாகுபாடில்லாமல் ஒன்றுபட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர் குற்றவாளி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். உக்ரைன் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ள வன்முறைகளுக்கு புதின் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். இதில் இருந்து புதினால் நிச்சயமாக தப்பிக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின் ஒரு ‘போர்க்குற்றவாளி’ என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். பொதுவெளியில் முதல்முறையாக ரஷ்ய அதிபரை ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

JOE BIDEN, PUTIN, WAR CRIMINAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்