'உலகப்புகழ்' பெற்ற நிறுவனத்துக்கு 'ஆப்பு' வைத்த அதிபர்... அதிரடி நடவடிக்கைகளால் 'மிரண்டு' போன நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா- சீனா இரண்டு நாடுகளுமே முட்டி, மோதுவதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்து வருகின்றன. மறுபுறம் இதனால் 3-வது உலகப்போர் மூளுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

சீன நிறுவனமான ஹூவாய் தனது தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். ஆனால் ஹவாய் இதை திட்டவட்டமாக மறுத்தது. எனினும் டிரம்ப் கடந்த ஆண்டு ஹூவாய் நிறுவன பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதித்தார். மேலும் அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது.

இந்த நிலையில் ஹூவாய்க்கு அமெரிக்கா அதிரடியாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹூவாய் நிறுவனத்துக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், ''அமெரிக்கா ஏற்கனவே விதித்துள்ள கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவே ஹூவாய் நிறுவனத்துக்கு இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை ஹூவாய் நிறுவனம் பெருமளவு பயன்படுத்தி வந்தது. இதற்கு சட்டத்தின் ஓட்டைகளே காரணமாக இருந்தன. அதை சரி செய்யவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின்படி அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனாவின் ஹூவாய் நிறுவனம், உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் செமிகன்டக்டர்களை தன்னுடைய நாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிகாரிகளிடம் இனிமேல் அனுமதி பெற வேண்டும்.

ஹூவாய் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சீன நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு தடைவிதித்தது. பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் கொண்டுவரப்பட்ட அந்த உத்தரவும் தொடரும்,'' என தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என்று கூறியதோடு, அந்த நாட்டின் ஓய்வூதிய திட்டத்தில் அமெரிக்கா செய்திருந்த பல நூறு கோடி டாலர் முதலீடுகளை திரும்ப பெறவும் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்