ஜாலியாக கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது.. மேலே பறந்துக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென.. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா: புளோரிடா - மியாமி கடற்கரையை ஒட்டிய பகுதியில், வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ள சம்பவம் அங்கிருந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் (19-02-2022) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரையை ஒட்டிய பகுதியில் யாரும் எதிர்பாராத விதமாக நடந்துள்ளது.
கடற்கரையில் குவிந்திருந்த பொதுமக்கள்:
மேலும் இந்த விபத்து இடம்பெற்ற போது கடலில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் வழக்கமாக எப்போதும் போல் ஜாலியாக வார இறுதி என்பதால் குடும்பம் நண்பர்கள் என சேர்ந்து வந்து குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஒரு ஹெலிகாப்டர் கடற்பகுதிக்கு மேல் பறந்து வந்துள்ளது. வழக்கமாக எப்போதும் வருவது தானே என நினைத்த மக்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளான ராபின்சன் ஆர்44 ஹெலிகாப்டரில் மொத்தம் 3 பேர் பயணம் செய்துள்ளனர்.
பொதுமக்கள் மியாமி கடற்கரை பகுதியில் நின்றிருந்தவர்கள் திடீரென வானத்திலிருந்து கடலில் விழுந்த ஹெலிகாப்டரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மியாமி கடற்கரை பொலிஸார், ஹெலிகாப்டரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று பேர்:
இது குறித்து காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அந்த ஹெலிகாப்டரில் மொத்தம் மூன்று பேர் பயணம் செய்தனர், ஒருவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பித்தார்கள். மற்ற இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் நலமுடன் இருக்கின்றனர்.
இந்த விபத்து தண்ணீரில் நிகழாமல் தரையில் நடந்திருந்தால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும்” என்று தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கொரோனா வந்துடுமோ-னு பயம்.. அதுனால தான் அப்படி செஞ்சேன்".. நாடகமாடிய நபருக்கு 38 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்த கோர்ட்..!
- சர்க்கார் சுந்தர் ராமசாமி ஸ்டைலில் ஓட்டுப்போட.. அமெரிக்காவில் இருந்து வந்த இளைஞர்!
- "விடிந்தால் மரண தண்டனை.. 'இனிமே சாப்பிடவே மாட்டேன்யா'.. கைதியின் கடைசி ஆசை.. விக்கித்துப் போன அதிகாரிகள்..!
- டேக் ஆப் செய்யும்போது விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்.. குறுக்க வந்த ட்ரக்.. பதறவைக்கும் வீடியோ..!
- 3 பெண்களை தீர்த்து கட்டிய கும்பல்.. அப்பா மகனிடம் சொன்ன ஒற்றை வார்த்தை.. 50 வருசத்துக்கு பின் போலீசுக்கு கிடைத்த துப்பு..!
- நீ என் பொண்ணு இல்லம்மா.. அப்பாக்கே இப்போ தான் தெரிஞ்சிது.. 30 வருஷம் முன்னாடி மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம்.. தெரிய வந்த உண்மை
- உன் ஹஸ்பண்ட் மேரேஜ் ஃபோட்டோ அனுப்புறேன், பாரு.. ஐயோ, இது என்னோடது.. மணமேடையில் வைத்து கைதான மணமக்கள்
- அமெரிக்கா வரை எதிரொலித்த ராகுல் காந்தி பேச்சு.. பாகிஸ்தான்-சீனா நட்பு பற்றி தெரிவித்த கருத்துக்கு பதிலடி
- விமானம் எங்கே போனது? பறக்க தொடங்கிய சில நொடிகளில்.. மாயமாக மறைந்த போர் விமானம்
- Online Food | ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த பெண்.. வாசலில் டெலிவரி பாய் ஆக பார்சலுடன் நின்ற போலீஸ்.. சுவாரஸ்ய சம்பவம்