'எல்லைப்' பிரச்னைகளை 'சீனா மதிப்பதில்லை...' 'அண்டை நாடுகளை' அச்சுறுத்துகிறது... 'சீனாவுக்கு' எதிராக அமெரிக்காவில் 'எழும் குரல்கள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்சர்வதேச சட்டத்தின்படி மோதல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக சீனா அண்டை நாடுகளை அச்சுறுத்த முயற்சிப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுத்தலைவர் எலியட் ஏங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே கடந்த 20 ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500 கி.மீ எல்லைய பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை.
இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வந்தாலும், அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
சீன இராணுவத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் அமெரிக்கா கூட்டாளியாக முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் லடாக்கில் எல்லை பகுதியில் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பால் தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வெளியுறவுக் குழுவின் தலைவர் எலியட் ஏங்கல் தெரிவித்துள்ளார்.
"இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில் நடந்து வரும் சீன ஆக்கிரமிப்பால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். சர்வதேச சட்டத்தின்படி மோதல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக அண்டை நாடுகளை அச்சுறுத்த முயற்சிப்பதை சீனா மீண்டும் நிரூபித்து இருக்கிறது," எனக் குறிப்பிட்டார்.
மேலும், "நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியான விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். இந்தியாவுடனான அதன் எல்லைக் பிரச்சினைகளை சீனா மதிக்க வேண்டும். தூதரக மற்றும் பிற வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்" என கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்...' 'இந்தியாவுடன்' சேர்ந்து செயல்பட 'முடிவெடுத்த நாடு...' 'உலக' நாடுகளுடன் சேர்ந்து 'செயல்படவும் திட்டம்...'
- 'I can't breathe'... அமெரிக்காவில் 'ஓங்கி ஒலிக்கும்' முழக்கம்... இதற்கு காரணம் 'கொரோனா அல்ல...'
- 'அமெரிக்காவுக்கு போதாத காலம்... ' 'கருப்பின' விவகாரத்தால் 'தீயாய்' பரவும் 'வன்முறை...' 'வெள்ளை மாளிகை மூடப்பட்டது...'
- 'இனி உங்க நட்பே வேணாம்...' 'துண்டிக்கப்பட்டது உறவு...' 'அமெரிக்க அதிபரின்' அதிரடி 'அறிவிப்பு...'
- "அந்த மாதிரி பண்றவங்கள அங்கயே சுட்டுத் தள்ளுங்க!" - டிரம்ப்பின் வெடிகுண்டு வார்த்தைகளால் 'வெடிக்கும் போராட்டம்'!
- “எங்க பிரச்சனைய நாங்க தீத்துக்குறோம் தலீவா!”.. 'மத்தியஸ்தரம்' செய்ய முன்வந்த டிரம்ப்.. 'சீனா' கொடுத்த பதிலடி!
- 'சீன' மாணவர்களுக்கு 'அடுத்த செக்...' "உளவு பார்த்தது போதும் கிளம்புங்க..." 'விசாவை' ரத்து செய்யும் 'அமெரிக்கா...'
- 'டிசம்பர் 1ம் தேதி என்ன நடந்தது'?... 'மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ள விஞ்ஞானிகள்'...வுகான் மர்ம முடிச்சுகள் அவிழ்கிறதா? இல்லை இறுகுகிறதா?
- 'சீனா'வால அவரு 'மூட் அவுட்'ல இருக்காரு... 'அப்படி' எதுவும் நடக்கல... 'மனுஷன்' சொல்றதுல உண்மையில்ல!
- "நாம 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம்..!".. 'கல்லு மாதிரி இருந்த மனுசன்'!.. 'முதல்' முறையா 'கண்ணீருடன்' பதிவிட்ட 'ட்வீட்'!