'மூளையைத் தின்னும் அமீபா...' 'ஒரே வாரத்துல ஆள் காலி...' ' எப்படி உடம்புக்குள்ள நுழையுது தெரியுமா...? சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்மிக அரிய வகை மூளையைத் தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெக்லேரியா ஃபௌலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபாவால் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழையும் இந்த மிக நுண்ணிய அமீபா ஒரு செல் மட்டுமே உடையது . இந்த அமீபா மூளையில் தொற்றினை உண்டாக்கினால், உயிரிழப்பு உறுதி.
இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிக அரிதாகவே தொற்றும் என்றாலும், இந்த அரிதான தொற்றுகளில் பெரும்பான்மை அமெரிக்க நாட்டின் தென் பகுதியில்தான் நிகழும். ஃபுளோரிடாவில் 1962ம் ஆண்டில் இருந்து 37 பேர் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த அமீபாவால் பாதிப்பு நிகழ்கிறது.
இந்த வகை அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்தில் இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். பெரும்பாலும் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரத்தில் உயிரிழந்து விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என ஃபுளோரிடாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். நெக்லேரியா ஃபௌலேரி என்ற அமீபா மிக அரிதானது என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு பக்கம் மாமனார், இன்னொரு பக்கம் மருமகள்'... 'நீச்சல் குளத்தில் மிதந்த சடலங்கள்'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
- பரபரக்கும் ‘H-1B’ விசா விவகாரம்.. கூகுள் CEO சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..!
- "ஊரடங்கு இன்னும் முடியல!.. அதனால".. 'எச்1பி, எச்4' விசா விவகாரத்தில் 'டிரம்ப்' எடுத்துள்ள பரபரப்பு முடிவு!
- ‘அதிபர் தேர்தலில் யாருக்கு ஓட்டு’.. கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு ‘ஷாக்’ கொடுத்த மக்கள்..!
- அமெரிக்காவில் மறுபடியும் போலீசாரால் ‘கருப்பின’ வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி.. ‘விஸ்வரூபம்’ எடுத்த போராட்டம்..!
- 'எனக்கு கொரோனா வந்தது கூட ஷாக் இல்ல'...'ஆனா, ஹாஸ்பிட்டல் பில்லை பார்த்து ஆடிப்போன நோயாளி'... அட்டாக் வர வைக்கும் பில் தொகை!
- கண்ணீரை துடைக்க நேரமில்லாம வாட்டிய ‘கொடூர’ கொரோனா.. 2 மாசம் கழிச்சு ‘முதல்முறையா’ அமெரிக்காவுக்கு ஆறுதல் தந்த தகவல்..!
- "மக்களே இத நீங்க பாத்துருக்கீங்களா?".. 'கெத்தா' ஆரம்பிச்சியே 'கைப்புள்ள?'.. 'டிக்டாக்' சாகசத்தால் 'பாடகருக்கு' நேர்ந்த 'விபரீதம்'!
- அமெரிக்காவில் 'லைட்' அடிச்சு கொரோனாவை விரட்டுறாங்க...! 'ட்ரெயின், பஸ்ன்னு எல்லா இடத்துலையும்...' அதிரடி பரிசோதனை...!
- ‘சின்ன வயசுலேயே பெரிய மனசும்மா’.. இந்திய வம்சாவளி 10 வயது சிறுமியை ‘வெள்ளை மாளிகைக்கு’ அழைத்து கவுரவித்த டிரம்ப்..!