Webcam ஆன் செய்யாத ஊழியரை வேலையைவிட்டு தூக்கிய நிறுவனம்... நீதிமன்றம் போட்ட Fine-ஐ பார்த்துட்டு திக்குமுக்காடிப்போன ஊழியர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் Webcam-ஐ ஆன் செய்யாததை காரணம் காட்டி ஊழியரை நிறுவனம் ஒன்று பணிநீக்கம் செய்திருக்கிறது. இதனையடுத்து நீதிமன்றத்துக்கு சென்ற பணியாளருக்கு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
WFH
கொரோனா காலத்தில் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டனர். அந்த சமயத்தில் உலக அளவில் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே தங்களது ஊழியர்களை பணிபுரியும்படி அறிவித்தன. அப்போது துவங்கி முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் Work From Home எனப்படும் வீட்டில் இருந்தே பணிபுரியும் வசதியையே பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க நிறுவனம் ஒன்று வீட்டில் இருந்தே பணிபுரிந்துவந்த தனது ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்திருக்கிறது. அதற்கு அந்நிறுவனம் கொடுத்த காரணம் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
வேலை
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தலைமையிடமாகக்கொண்ட டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட ஊழியர். நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அவரிடம் தினசரி 9 மணி நேர ஷிஃப்ட்டில் வெப்கேமராவை ஆன் செய்து வைக்க வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஸ்க்ரீன் ஷேரிங்கும் செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சரி என ஒப்புக்கொண்ட அவர் ஸ்க்ரீன் ஷேரிங் மட்டும் செய்துவந்திருக்கிறார்.
வெப் கேமராவை ஆன் செய்யாதது குறித்து நிறுவனம் கேள்விகேட்ட நிலையில், தன்னுடைய தனியுரிமையை பாதிக்கும் வகையில் இருந்ததால் வெப் கேமராவை ஆன் செய்யவில்லை என ஊழியர் பதிலளித்துள்ளார். இதனால் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதாக அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது அந்த நிறுவனம். இதனையடுத்து நெதர்லாந்து நீதிமன்றத்தில் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார் அந்த ஊழியர்.
தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதுகுறித்து பேசுகையில்,"ஒரு ஊழியர் வெப் கேமராவை ஆன் செய்யவில்லை என கூறி பணிநீக்கம் செய்வது ஏற்புடையதல்ல. மேலும், ஊழியர் தொடர்ந்து வெப் கேமராவை ஆன் செய்திருக்க வேண்டும் என நிர்பந்திப்பது அவருடைய தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிரானது. அதை நெதர்லாந்து சட்டம் ஏற்காது. ஆகவே, பாதிக்கப்பட்ட ஊழியருக்கு 75 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 60 லட்ச ரூபாய்) இழப்பீடாக வழங்கவேண்டும். மேலும், ஊழியரின் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம், நீதிமன்ற செலவுகள் ஆகியவற்றையும் வழங்கிட வேண்டும்" என உத்தரவிட்டார். இதனால் அந்த ஊழியர் தற்போது மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.
Also Read | சிறுவனுடன் Push-up சேலஞ்ச்.. சாலையில் தண்டால் எடுத்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "600 ஈமெயில் அனுப்புனேன்".. விடா முயற்சியுடன் வேலைதேடிய இந்திய மாணவர்.. கடைசில அடிச்சது பாருங்க ஜாக்பாட்.. !
- மகனின் கருவை சுமக்கும் தாய்.. இப்படி ஒரு முடிவுக்கு என்ன காரணம்.? நெகிழ்ச்சி பின்னணி..!!
- ஹோட்டல் ஊழியருக்கு லட்சக்கணக்கில் டிப்ஸ் கொடுத்த நபர்.. கோர்ட்டுக்கு போன உரிமையாளர்.. லாஸ்ட்ல தெரியவந்த உண்மை..!
- "அவரு இறந்துட்டாரு".. உடல் உறுப்புகளை அகற்ற தயாரான மருத்துவர்கள்.. வேகமாக வந்த மனைவி சொன்ன பரபரப்பு விஷயம்!!
- பேச மறுத்த பக்கத்து வீட்டுப்பெண்... போன்லையும் பிளாக்.. இளைஞர் செஞ்ச பயங்கரம்... தட்டிதூக்கிய போலீஸ்..!
- அப்பாவுக்கு லாட்டரியில் அடிச்ச ஜாக்பாட்.. "அதோட குடும்பமே இரண்டா பிரிஞ்சிடுச்சு".. அதிர்ச்சியை உண்டு பண்ணிய பின்னணி!!
- மருத்துவமனையில் உயிரிழந்த 'தாய்'.. மகள் மொபைலில் கடைசியாக 'கூகுள்' செய்த விஷயம்.. உறைந்து போன போலீசார்.. அதிர்ச்சி சம்பவம்!!
- "வீட்டு வாசனை பிடிக்கலயாம்".. Advance-ல ₹20 ஆயிரம் Cut பண்ண ஹவுஸ் ஓனர்! Tenant சொன்ன காரணங்களை கேட்டு தல சுத்தி போன நெட்டிசன்கள்
- பழுதான விமான எஞ்சின்.. வேற வழியில்லாம சாலையில் தரையிறக்குன விமானிகள்.. திக்.. திக் வீடியோ..!
- "ஆண் பிள்ளை தான் வேணும்னு.. 8 வருஷமா இப்படி பண்றாங்க.. என்னால தாங்க முடியல".. அமெரிக்காவில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு.!