‘தன்னைக் காப்பாற்றிக்கொள்ள’.. ‘11 மாத குழந்தையை கேடயமாக்கிய தந்தை’.. ‘மனதை உலுக்கும் கொடூர சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் போதைப்பொருள் கும்பலுக்கும், அதை வாங்கச் சென்றவருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தந்தை தன் மகனையே கேடயமாகப் பயன்படுத்தியுள்ளார்.

வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா என்ற மாகாணத்தைச் சேர்ந்தவர் நஃபீஸ் மன்ரோ. இவர் கடந்த மாதம் 19ஆம் தேதி தன் இரண்டாவது மனைவி, 11  மாத குழந்தை மற்றும் நண்பர் ஒருவருடன் போதைப்பொருள் வாங்கச் சென்றுள்ளார். அங்கு பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கிவிட்டு நஃபீஸ் காரில் ஏறியபோது, அவர் கள்ள நோட்டுகளைக் கொடுத்ததால் கடுப்பான போதைப் பொருள் கும்பல் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் காரின் முன் இருக்கையில் இருந்த நஃபீஸின் இரண்டாவது மனைவியும், நண்பரும் இறங்கி ஓடியுள்ளனர். அதற்குள் அந்தக் கும்பல் காருக்கு அருகில் வந்து தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அப்போது நஃபீஸ் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தன் 11 மாத குழந்தையை மனித கேடயமாகப் பயன்படுத்தியுள்ளார்.  இதில் குழந்தை மீது 4 குண்டுகள் பாய்ந்துள்ளது. இதையடுத்து தற்போது குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள போலீஸார், “முதலில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தான் குழந்தை காயமடைந்தது என கூறப்பட்டது. பின்னர் நஃபீஸிடம் நடத்தப்பட்ட விசாரணையிலேயே அவர் தன் குழந்தையை மனித கேடயமாகப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. போதைப் பொருள் வாங்கச் சென்றபோது குழந்தை தன்னுடன் இருந்தால் யாரும் எதுவும் செய்யமாட்டார்கள் என நினைத்து அவர் அழைத்துச் சென்றிருக்கலாம். குழந்தை காயமடைந்த பிறகும் முதலில் வீட்டுக்குச் சென்றுவிட்டு பின்னரே குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதையடுத்து தப்பியோடிய நஃபீஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ” எனக் கூறியுள்ளனர்.

USSHOOTING, FATHER, BABY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்