‘நான் மட்டும் இப்போ அமெரிக்க அதிபரா இருந்திருந்தா...!’ உக்ரைன்-ரஷ்யா விவகாரம்.. டிரம்ப் பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தான் தற்போது அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன்-ரஷ்யா போரை எவ்வாறு எதிர்கொண்டிருப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

‘உக்ரைன் விவகாரம்’.. இது நடந்தா முழுக்க முழுக்க ரஷ்யா தான் பொறுப்பு ஏத்துக்கணும்.. ஜோ பைடன் பரபரப்பு தகவல்..!

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் பல பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.

ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தி வருவது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நிலைமையை சரியாக கையாண்டிருந்தால் உக்ரைனில் தற்போது உள்ள சூழ்நிலை ஒருபோதும் வந்திருக்காது. எனக்கு விளாடிமிர் புதினை நன்றாக தெரியும். அவர் தற்போது செய்யும் செயலை, நான் அதிபராக இருந்திருந்தால் நிச்சயம் செய்திருக்கமாட்டார்.

ஆனால் இனி ஒன்றும் செய்ய முடியாது. தற்போது போர் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. புதின் தனக்கு என்ன வேண்டுமோ அதை பெறுவது மட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை உயர்வதால் மேலும் பணக்காரராகிக் கொண்டிருக்கிறார்’  என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

உக்ரைன் மேல ரஷ்யா வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தல.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

US EX-PRESIDENT DONALD TRUMP, RUSSIA-UKRAINE CRISIS, UNITED STATES, US PRESIDENT, உக்ரைன்-ரஷ்யா விவகாரம், அதிபர் டொனால்டு டிரம்ப்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்