அமெரிக்காவை உலுக்கிய ‘ஜார்ஜ் பிளாய்ட்’ மரணம்.. அந்த போலீஸ் அதிகாரிக்கு என்ன ‘தண்டனை’ தெரியுமா..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவரை போலீஸ் அதிகாரி கொலை செய்த வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் (Minneapolis) நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் (George Floyd). இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அவர் கொடுத்த பணத்தில் 20 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) கள்ள நோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின்பேரில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் (Derek Chauvin) தலைமையில் 4 போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்தனர். அப்போது விசாரணைக்காக அழைத்தபோது ஜார்ஜ் பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் செல்ல மறுத்ததாக தெரிகிறது. இதனால் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின், ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் தள்ளி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார்.
அப்போது ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள்’ என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சினார். ஆனாலும் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் எழுந்திருக்கவில்லை. இதனால் மூச்சுவிட முடியாமல் ஜார்ஜ் பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலானது.
இதனை அடுத்து ஜார்ஜ் பிளாய்டின் இறப்புக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டம் அமெரிக்காவையே உலுக்கியது. இதனிடையே ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உட்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதில் டெரிக் சாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டிவியில வந்த 'ஒரு' காட்சி...! 'சொந்த மனைவியை 'மீண்டும்' திருமணம் செய்த கணவன்...' - நெஞ்சை உருக செய்யும் காரணம்...!
- ‘சீன அணு உலையில் கசிவு?’.. பிரான்ஸ் நிறுவனம் ‘பகீர்’ புகார்.. அமெரிக்கா அவசர ஆலோசனை.. சைலண்ட் மோடில் இருக்கும் சீனா..!
- என்ன இப்போ லாட்டரி அடிக்கவா போகுது...? 'டிக்கெட்டை தூக்கி கடாசிட்டு போயிருக்காங்க...' 'இந்திய வம்சாவளி பெண் செய்த 'காரியத்தினால்' அடித்த ஜாக்பாட்...!
- ‘அதோட மதிப்பு தெரியாம வித்துட்டேனே’!.. இலவசமாக கிடைத்த சோபாவை விற்ற பெண்.. அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி..!
- 'போர் நடந்துச்சுன்னா...' கண்டிப்பா 'நீங்க' தோத்துடுவீங்க...! 'வல்லரசு நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா...' - என்ன காரணம்...?
- இதை பண்ணிட்டு தாராளமா ‘மாஸ்க்’ போடாம வெளியே வாங்க.. அமெரிக்க அரசு ‘அதிரடி’ அறிவிப்பு..!
- கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ‘புதிய’ மைல் கல்.. உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த அமெரிக்கா..!
- ”பொண்ணுங்களா...! அப்படி நான் என்ன சொல்லிட்டேன்...' அதுக்காக 'இப்படியா' பண்ணுவீங்க...?” - ‘தரமான சம்பவம்' செய்த பெண்கள்... காருக்குள்ளேயே கதறிய ‘கால் டேக்ஸி’ டிரைவர்...!
- VIDEO: ‘மேடம் கொஞ்சம் நில்லுங்க’!.. ‘ரெண்டு பேரும் உங்க ஐடி கார்டை காட்டுங்க’.. போலீசாருக்கு ‘ஷாக்’ கொடுத்த 2 பெண்கள்..!
- 180 வயசு வரை ‘இளமையாக’ இருக்க ஆசை.. அதனால வயசாவதை தடுக்க ‘இதை’ செய்யப்போறேன்.. அதிரவைத்த தொழிலதிபர்..!