நைட் வரை நல்லாதான் இருந்தது.. ஆனா திடீரென ‘மாறிய’ முடிவுகள்.. ‘உச்சக்கட்ட’ பரபரப்பில் அமெரிக்கா..!
முகப்பு > செய்திகள் > உலகம்தேர்தல் முடிவுகள் திடீரென மாறியது எப்படி என டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. மொத்தம் 538 பிரதிநிதிகளை கொண்ட தேர்வு குழுவில், 270 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறுபவரே அதிபராக தேர்வு செய்யப்படுவார். தற்போது வரை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார்.
இந்தநிலையில் எதிர்கட்சிகள் வாக்கு எண்ணிக்கையில் முறைக்கேடு செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என தெரிவித்து வருகிறார். மேலும் உச்சநீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும், தேர்தலில் தான் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை எண்ணத் தொடங்கிய இரவு பெரும்பாலான மாநிலங்களில் தான் முன்னிலையில் இருந்ததாகவும், ஆனால் திடீரென ஒவ்வொரு மாநிலங்களிலும் எதிரான முடிவுகள் வெளியாகியிருப்பது விசித்திரமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தபால் வாக்குகளை எண்ணும்போதெல்லாம் முடிவுகள் எப்படி மாறுகின்றன என்பது தெரியவில்லை என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்